பொருளடக்கம்
கம்பு-பச்சைப்பயறு புட்டு
கம்பு இட்லி & கோவைக்காய் சட்னி
சுவையான சத்தான உணவுகள்
வயல் இயற்கை அங்காடிஎண்.14,
IELC காம்ப்ளக்ஸ்,
ராஜீவ்காந்தி சிலை எதிரில்,
ஆம்பூர் - 635 802
(பெதஸ்தா மருத்துவம் போகும் சர்வீஸ் ரோட் போகும் வழி)
9514665707;9443036167
https://www.facebook.com/groups/468212400263336/
கம்பு-பச்சைப்பயறு புட்டு
கம்பு, பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ள. இது இரண்டையும் வைத்து எப்படி புட்டு செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - ஒரு கப்,
முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
தேங்காய்த்துருவல் - அரை கப்,
நெய் - ஒரு தேக்கரண்டி.
செய்முறை:
* வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.
* கம்பு மாவில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறவும்.
* புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, தேங்காய்த்துருவல் என்றபடி அடுத்தடுத்து அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கம்பு - பச்சைப்பயறு புட்டு தயார்.
* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த உணவு.
வயல் இயற்கை அங்காடி
எண்.14,
IELC காம்ப்ளக்ஸ்,
ராஜீவ்காந்தி சிலை எதிரில்,
ஆம்பூர் - 635 802
(பெதஸ்தா மருத்துவம் போகும் சர்வீஸ் ரோட் போகும் வழி)
9514665707;9443036167
https://www.facebook.com/groups/468212400263336/
Go to top
கம்பு இட்லி & கோவைக்காய் சட்னி
கம்பு இட்லி
தேவையான பொருட்கள்
கம்பு - 1 1/2 கப்
இட்லி அரிசி/ புழுங்கலரிசி - 1/2 கப்
வெள்ளை முழு உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை
*அரிசி+கம்புஇவைகளை தனியாகவும்,உளுந்து,வெந்தயம் இவைகளை ஒன்றாகவும் ஊறவைக்கவும்.
*கம்பை மட்டும் குறைந்தது 8 மணிநேரம் அல்லது முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.
*அரிசி மற்றும் உளுந்தை 4 மணிநேரம் ஊறினால் போதும்.
*உளுந்து +கம்பு இவைகளை நைசகவும்,அரிசியை கொரகொரப்பாகவும் அரைத்து உப்பு சேர்த்து ஒன்றாக கரைத்து புளிக்கவிடவும்.
*புளித்ததும் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.
பி.கு
*தோசையும் நன்கு முறுகலாக வரும்.
கோவைக்காய் சட்னி
தே.பொருட்கள்
நறுக்கிய கோவைக்காய் - 10/12 எண்ணிக்கை
நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் துண்டுகள் - 2
புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை
*மேற்கூறிய பொருட்களில் உப்பு+தேங்காய்+புதினா கொத்தமல்லி தவிர அனைத்தையும் சிறிது எண்ணெயில் வதக்கவும்.
*ஆறியதும் உப்பு+தேங்காய்+புதினா கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும்.
*விரும்பினால் தாளித்துக் கொள்ளவும்
No comments:
Post a Comment