இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?
வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு இயற்கை உரம் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இயற்கை உரம் என்பது விவசாயக் கழிவுகளான உமி, கிளை, இலைதழை, புல், கொட்டை, பழம் ஆகியவற்றிலிருந்தும், சமையலறைக் கழிவுகளான வீடு, உணவகம் மற்றும் சந்தையிலிருந்து கிடைப்பவற்றிலிருந்தும், விவசாய தொழிற்துறைக் கழிவுகளான உணவுத் தொழில் நுட்பம், தோல், விதை, தண்டு, பழம், காய்கறி, சக்கை போன்றவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
பொருளடக்கம்
பழக்காடி
பஞ்சகவ்யா
மண்புழு உரம்
அமிர்த கரைசல்
பிரம்மாஸ்திரா
அக்னி அஸ்திரம்
சுக்கு அஸ்திரா
பீஜாமிர்தம்
ஜீவாமிர்தம்
கனஜீவாமிர்தம்
நீம் அஸ்திரா
மீன் அமினோ அமிலம்
அரப்பு மோர் கரைசல்
வீட்டில் இயற்கை உரம் தயாரித்தல்
தோட்டத்தில் எரு தயாரித்தல்
பசுந்தாள் உரம்
பசுந்தழை உரம்
கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம்
கற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி.
பூண்டுக் கரைசல்
IMO
இயற்கைப் பூச்சிவிரட்டி
ஆடுகள் மூலம் இயற்கை உரம்
கிடைக்கும் இடங்கள்
பழக்காடி
வாழைப்பழம், அரசாணி, பப்பாளி, நாட்டுக் கோழி முட்டை ( ஓடை நீக்கிய ), சர்க்கரை (சர்க்கரை, இரசாயனம் கலக்காததாக இருக்க வேண்டும்). பழங்கள் அனைத்தும் நன்கு கனிந்து இருத்தல் நலம் ( பழக்கடைகளிருந்து கழித்த பழங்களை பெற்றும் பயன்படுத்தலாம்). இவற்றை நன்றாகக் கலக்கி 25 நாட்கள் மூடி வைத்தால் தயாராகிவிடும், இதனை 3 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். ஸ்பிரேயரில் 300 மி.லி ஒரு டேங்கிற்கு ( 10 லிட்டர் தண்ணீர் ) கொடுக்கலாம்.
Go to top
பஞ்சகவ்யா
சாணம் – 3 கிலோ, கோமியம் – 3 லிட்டர், பால் – 2 லிட்டர், தயிர் – 2 லிட்டர், நாட்டுச் சர்க்கரை – 1 கிலோ. இவற்றை ஒருசேர கலக்கி மர நிழலில் வைத்து காலை மாலை என தினமும் கலக்கி வர 7வது நாள் பஞ்சகவ்யா தயாராகிவிடும். 1 டேங்கிற்கு (10 லிட்டர் தண்ணீர்) 200 மி.லி வரை கலந்து ஸ்பிரே செய்யலாம். பாசனத்தின் போதும் கொடுத்துப் பலன்பெறலாம்.
ஒரு கரைசல் ஊட்டத்திற்கு, ஒரு கரைசல் பூச்சி விரட்டி; என்று மாறி மாறி கொடுக்கவேண்டும். பூச்சி விரட்டியாக வேப்ப எண்ணெய் புங்கன் எண்ணெயும் ( ‘கோவை வணிகம்’ – மே 2014 இதழில் ‘பொன்னீம்’ பற்றிய விரிவான கட்டுரை இடம் பெற்றதை வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் (பொன்னீம் – வேப்ப எண்ணெய் மற்றும் புங்கன் எண்ணெய்யின் கலவை ) )மற்றும் இலை தழைகளைக் கொண்டு மூலிகைப் பூச்சி விரட்டி கரைசல் தயார் செய்தும் பயன்படுத்தி வருகிறார். மூன்று நாளைக்கு ஒரு முறை ஊட்டத்திற்கென்று ஸ்பிரே செய்திட வேண்டும், பூச்சித் தாக்குதல் அதிகமாக இருந்தால் பார்முலாவை மாற்றியமைக்கும் சூழலும் ஏற்படும். 20 நாளில் 6 கரைசல் கொடுத்திடுவோம். அதாவது, வாரத்திற்கு இரண்டு முறை.
செயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் விளை பொருளை உண்பவருக்கு கேடு வருகிறேதோ இல்லையோ. அதன் தாக்கமும், பாதிப்பும் விவசாயியை நேரடியாக பாதித்துவிடுகிறது. நம்மைப் பாதுகாக்கவே இயற்கை விவசாயம். பூச்சிக் கொல்லி, களைக் கொல்லி ஆகியவைகள் தெளிக்கும் போது நம் மூச்சுக் காற்று, கையில் படிவது… போன்ற பல வகைகளில் நேரடியாக விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தான் தீய பழக்கங்கள் இல்லா விவசாயப் பெருங்குடிமக்களுக்கும் புற்றுநோய் ஏற்படுகின்றது. எத்தனை முறை பூச்சிக் கொல்லி, வளர்ச்சி யூக்கி என்று கீரைகளின் மீது தெளிக்கப்படுகிறது என்று நுகர்வோர் ஒரு முறை சென்று நேரில் கண்டால் அதிர்ச்சி காத்திருக்கும். மேலும், இரசாயன உணவு உற்பத்தியினால் மொத்த உயிரினமும் சுற்றுப்புறச்சூழலும் பெரிய அளவில் நோயுற்று கிடக்கிறது என்கிறார் வேதனையுடன்.
Go to top
மண்புழு உரம்
தயாரிப்பு முறை
☘மண்புழு உரம் உற்பத்தி செய்ய நிழலுடன் அதிகளவு ஈரப்பதம் உள்ள குளிர்ச்சியான பகுதியாக இருக்க வேண்டும்.
☘திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கவும்.
வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பதற்கு, தென்னைக்கீற்றுக் கூரையை பயன்படுத்தலாம்.
☘சிமெண்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 3 அடியாகவும் அகலம் 3 அடியாகவும் நீளம் உங்கள் விருப்பமாக அமைத்து கொள்ளலாம்.
☘மண்புழு உரம் உற்பத்திகான படுக்கை. தென்னை நார்கஅழகிரி கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உரம் உற்பத்திக்கான படுக்கையின் அடிப்பாகத்தில் 6 செ.மீ . உயரத்திற்கு பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.
☘இப்போது நாம் பாதி மக்கிய கால்நடைக் கழிவுடன் இலை மக்குக் கழிவு மற்றும் காய்கறி மக்கு போன்ற கழிவுகளை படுக்கையில் நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 65% இருக்கு வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் உயரத்திற்கு ஒரு கிலோ மண்புழு தேவைப்படுகிறது.
☘நாம் தினமும் தண்ணீர் தெளிப்பது அவசியம். இதனுடைய ஈரப்பதம் 65% இருக்கு வேண்டும். தண்ணீரை ஊற்றக்கூடாது, தெளிக்க வேண்டும் மேலும் அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.
☘இப்போது நாம் மண்புழு உரப் படுக்கையில் மேல் உள்ள மண்புழுக் கழிவினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இந்த அறுவடை 5 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். எப்போதும் நாம் கையால்தான் புழுகழிவினை சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும் அல்லது இருட்டான அறையில் 45% ஈரப்பதத்தில் சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். திறந்த வெளியில் உரத்தை சேமிக்கும்போது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும்.இதனால் இந்த மண்புழு உரத்தில் உள்ள நுண்ணுயிர்கள் அழிவதைத் தடுக்கலாம்.
☘ *ஊட்டமேற்றிய மண்புழு உரம்*
பாஸ்போ பேக்டீரியா, அசிட்டோபேக்டர், அஸ்சோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தினை ஊட்டமேற்றலாம். இதன்மூலம் பயிர்களுக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் அதிகரிக்கின்றன.
☘முக்கியமாக கவனிக்க வேண்டியவை இந்த உரத்தை பயிர்களுக்கு இட்டவுடன் மண் அணைத்து உடனடியாக தண்ணீர் பாச்ச வேண்டும்.மண்புழு உரம் சூரிய ஒளியில் பட்டால் இதில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும். அதனால் கண்டிப்பாக எல்லாப் பயிர்களுக்கும் இட்டவுடன் தண்ணீர் பாச்ச வேண்டும்.
Go to top
அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10 kg,பசுவின் கோமியம் -10லிட்,நாட்டு சர்க்கரை -250 g,தண்ணீர் -100 lit,நிலத்தினுடைய வளமான மேல் மண் ஒரு கைப்பிடி அளவு.
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
Go to top
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
Go to top
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
Go to top
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
Go to top
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
Go to top
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
Go to top
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
Go to top
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
Go to top
மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
பிற பயன்கள்: மீன் அமினோ அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.
விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.மீன் அமினோ அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.
Go to top
அரப்பு மோர் கரைசல்
இயற்கை வேளாண் பண்ணைகளை கிராமங்களில் உருவாக்கி குறைந்த செலவில் அதிக லாபம் தரும் வேளாண் தொழில்நுட்பங்களை தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்வது தற்கால சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாகும்.
÷இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும்.
÷தயாரிக்கும் முறை: நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
÷இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும். பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.
÷விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தங்கள் வீடுகளிலேயே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.
÷பிற பயன்கள்: அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.÷குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும். அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.
÷அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.
÷எனவே குறைந்த செலவில், காலத்தில் விவசாயிகளிடம் உள்ள இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை கொண்டு எளிதாக தயாரிக்கப்படும் அரப்பு மோர் கரைசலை தமிழக விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறியுள்ளார்.
நன்றி
Go to top
வீட்டில் இயற்கை உரம் தயாரித்தல்
ஒரு பிளாஸ்டிக் வாளி அல்லது தொட்டி (மண், சிமிண்ட், பிளாஸ்டிக்) எடுத்துக் கொள்ளவும். அதன் அடியில் சிறு துவாரங்கள் இட வேண்டும். துவாரமானது காற்றோட்டத்திற்கும் அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதற்கும் உதவும்.
பின் அதில் ஒரு இஞ்ச் உயரத்திற்கு சிறு சிறு கற்களை பரப்பவும். அதன் மீது ஒரு இஞ்ச் உயரத்திற்கு மணலைப் பரப்பவும். அதன் மீது ஒரு இன்ச் உயரத்திற்கு அந்தப் பகுதியில் கிடைக்கும் மண்ணைப் பரப்பவும்.
அதன் மீது தினமும் சேரும் சமையலறைக் கழிவுகள், காய்ந்த இலை சருகுகள், கிழிந்த தாள்கள் (தாள்களை தண்ணீரில் நனைத்து தொட்டியில் போடவும்) ஆகியவற்றைச் சேர்க்கவும். ஆரம்பத்தில் அசைவக் கழிவுகளைத் தவிர்க்கவும்.
அவற்றில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஈரப்பதம் அதிகம் இருந்தால் கழிவோடு சற்று மண்ணைச் சேர்க்கவும். தொட்டி நிறையும் வரை கழிவுகளைச் சேர்த்து வரவும்.தொட்டி நிறைந்தவுடன் தொட்டியை மூடிவிடவும். மூடியின் மீது சிறு துவாரம் இடவும்.
வாரம் ஒருமுறை கழிவுகளை கிளறி விடவும். கழிவுகள் மட்குவதற்கு 30 நாட்களிலிருந்து 60 நாட்கள் வரை ஆகும். நன்கு மக்கிய கழிவுகளிலிருந்து மண்வாசனை வரும். இயற்கை உரம் தயார். இது கருமையான நிறத்தில் இருக்கும்
Go to top
தோட்டத்தில் எரு தயாரித்தல்
முதலில் எரு தயாரிக்க மூட்டத்தின் அடிப்பகுதியில் சிறு கம்பு மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தவும். இது காற்றோட்டத்திற்கு உதவும். இதன் மீது புல், இலை தழைகள் சருகுகள், பழக்காய்கறிக் கழிவுகள் முட்டை மற்றும் விரைவில் மக்கிப் போகும் பொருட்களைப் பயன்படுத்தவும்.
பெரியனவாக இருக்கும் பொருட்களை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். புதிய சாணத்தைக் கரைத்து மூட்டத்தின் மீது தெளிக்கவும். மூட்டத்தின் உயரம் 3 அடிக்குக் குறையாமலும் 5 அடிக்கு மேற்போகாமலும் இருக்க வேண்டும்.
மூட்டத்தின் ஈரத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ள அதனைப் பிளாஸ்டிக்கால் மூடவும். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த மூட்டத்தில் தண்ணீர் தெளிக்கவும். மூட்டத்தை 10 நாட்களுக்கு ஒரு முறை கிளறி விடவும். 45லிருந்து 60 நாட்களுக்குப் பிறகு இயற்கையான எரு தயாராக இருக்கும். தயார் நிலையிலுள்ள எருவில் மண்வாசனை வரும்.
Go to top
பசுந்தாள் உரம்
பசுந்தாள் உரம் எனப்படுவது தக்கை பூண்டு, சணப்பை, மணிலா, அகத்தி, கொளுஞ்சி, நரிப்பயிறு ஆகியவற்றை உரமாக இடுவது ஆகும்.
மரங்களிலிருந்தோ எடுக்கப்படும் பசுந்தழைகளின் மூலமும் பெறலாம். பசுந்தாள் உரம் என்பது பயிறு வகைகளை பயிரிட்டுஇ பின் போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணில் உழவுண்டும். பசுந்தாள் உரத்திற்காக வளர்க்கப்படும் பயிர்கள் பசுந்தாள் உரப்பயிர்களாகும். முக்கியமான பசுந்தாள் உரப்பயிர்கள்
சணப்புஇ தக்ககைப்பூண்டுஇ பில்லி பயறுஇ கொத்தவைரைஇ அகத்திஇ கொளுஞ்சிஇ நெட்டிஇ சணப்பை ஆகும்.
அங்கக உயிர்ப் பொருள் உற்பத்தி மற்றும் பசுந்தாள் உரத்தில் தழைச்சத்தின் அளவு
பயிர்
அகத்தி – வயது நாட்கள் 60. உலர் பொருள் டன் எக்டர் 23.2இ தழைச்சத்தின் அளவு 133.
சணப்பு – வயது நாட்கள் 60இ உலர் பொருள் டன் எக்டர் 30.6இ தழைச்சத்தின் அளவு 134
தட்டைப்பயிறு – வயது நாட்கள் 60இ உலர் பொருள் டன் எக்டர் 23.2இ தழைச்சத்தின் அளவு 74.
பில்லிப்பயிறு – வயது நாட்கள் 60இ உலர் பொருள் டன் எக்டர் 25.0 தழைச்சத்தின் அளவு 102.
கொத்தவரை – வயது நாட்கள் 50இ உலர் பொருள் டன் எக்டர் 3.2இ தழைச்சத்தின் அளவு 91.
4. பசுந்தாள் உரத்தின் ஊட்ட அளவு:
1. சணப்பு – 2.30 தழைச்சத்துஇ 0.60 மணிச்சத்து இ சாம்பல் சத்து 0.40 உல்ர் நிலையில் ஊட்டஅளவுகள் ஆகும்.
2. தக்கைப்பூண்டு – 3.50 தழைச்சத்துஇ மணிச்சத்து 0.60 இ சாம்பல் சத்து 1.20 உல்ர் நிலையில் ஊட்டஅளவுகள் ஆகும்.
3. அகத்தி – 2.71 தழைச்சத்துஇ மணிச்சத்து 0.53 இ சாம்பல் சத்து 2.21 உல்ர் நிலையில் ஊட்டஅளவுகள் ஆகும்.
தக்கைப்பூண்டு என்பது தண்டுப் புகுதியில் முடிச்சுள்ள பசுந்தாள் உரப் பயிராகும். இதனுடைய தாயகம் மேற்கு ஆப்ரிக்கா. இது ஓரு குறைவான வாழ்நாள் உடைய தாவரம். ஓளிக்கால அளவுக்கு ஏற்றவாறு எளிதில் கிரகித்துக் கொள்ளும். தழைப்பருவத்தின் கால அளவு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தி ல் விதைக்கும் பொழுது குறைவாக இருக்கு ம். மும்பையில் உள்ள பாபா ஆணு ஆராய்ச்சி நிலையம் உருவாக்கிய திடீர் மாதி ஒளிக்கால அளவுக்கு ஏற்றவாறு எளதில் கிரகித்துக் கொள்ளாது. உப்புத்தன்மை மற்றும் நீர்தேங்கிய நிலைகளை தாங்கக் கூடியது. வளர்ச்சி மற்றும் தழைச்சத்து நிலைப்படுத்துததல் டி.எஸ் ஆர்- 1 இரகத்தில் மற்ற இரகங்களைவ விட அதிகமாக இருக்கும்.
பயன்கள்
1. மண் அமைப்பை மேம்படுத்தும்
2. நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும்
3. மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்கும்.
4. இயற்கை உரம்
இயற்றகை உரம் என்பது தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து கிடைக்கும். ஊட்டச்சத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. சிதைவுறுதலுகு;கு பிறகு ஊட்டச்சத்துக்கள் nவெளிவருகின்ற்ன. பயிரின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக விலங்குகள்இ மனிதன் மற்றும் காய்கறிகளின் கழிவுகளைப் பயன்படுத்துதல் மற்றம் சேகரித்தல் என்பது வேளாண்மையில் தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கிறது. அங்கக படிவங்கிலுள்ள தாவர ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய விலங்குகள்இதாவரமட்இ மற்றும் மனிதக் கழிவுகளிலிருந்து பெறபப்பட்ட அங்ககப் பொருள்ளே இயற்கை உரம் அல்லது எருவாகும்இ இயற்கையாக இருக்கக் கூடிய அல்லது செயற்கையான வேதிப்பொருள்களை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்களை செயற்கை உரங்கள் என்று அழைக்கிறோம். குறைவான ஊட்டச்தத்துடைய இயற்கை உரம்இ அதிக அளவு எச்சப்பயனை உள்ளடக்கியது. அதிக ஊட்டச்சத்துக் கொண்ட செயற்கை உரங்களைக் காட்டிலும் இது மண்ணின் இயல் குணங்களை மேம்படுத்துகிறது.
இயற்கை உரத்தின் முக்கியமான ஆராரங்கள்
1. கால் நடைத் தொழுவத்தின் கழிவுகள்- சாணம்இ சீறுநீர்இசாண எரிவாயயுக் கலத்தில் உள்ள சேற்றுக் குழம்பு
2. மனிதன் வாழும் இடங்களில் இருந்து வரும் கழிவுகள் மலக்கழிவு, சீறுநீர், நகரக் கழிவுகள், கழிவு நீர், சாக்கடைக் கழிவு, கழிவுப்படிவம்.
3. கோழிப்பண்ணைக் குப்பை, ஆடு, மாடுகளின கழிவுகள்
4. இறைச்சி வெட்டுமிடத்தில் உள்ள கழிவுகள் எலும்பு எரு, மாமிச எரு, இரத்தக் குருதி எரு, கொம்பு மற்றும் குளம்பு எரு, மீனின் கழிவுகள்.
5. வேளாண் தொழில் துறையினுடைய துணைப் பொருட்கள் எண்ணெய் பின்னாபக்கு, கரும்புச் சக்கை , மற்றம் சர்க்கரை ஆலைக் கழிவு , பழ மற்றும் காய்கறி பதப்படுத்வுததிலிருந்து வரக்கூடிய கழிவுகள் மற்றும் இன்ன பிற பொருட்கள்
6. பயிர் கழிவுகள் கரும்புச் சருகு , பயிர்த்தூர் மற்றும் இதர பொருட்கள்
7. வெங்காயத் தாமரை , களைகள் , நீர்த் தொட்டியின் படிவுகள்
8. பசுந்தாள் உரப் பயிர்கள் மற்றும் பசுந்தழை உரப் பொருட்கள்
பருமனனான அங்ககப் பொருட்கள்
பருமானனான அங்ககப் பொருட்கள் குறைவான சதவீதம் கொண்ட ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. மற்றும் அதிக அளவில் பயிர்களுக்கு இட வேண்டும். பண்ணை உரம்இமட்கிய உரம் , பசுந்தாள் உரங்கள் பருமானன அங்ககப் பொருட்களின் ஆதாரங்கள் ஆகும். இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
1. நுண் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய தாவர ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது.
2. மண் இயல் நிலைக் குணங்களான மண் அமைப்புஇநீர் பிடிப்புக் கொள்ளளவு
பசுந்தாள் உரம் – 2
தேவையான பொருட்கள்
🍯 அகத்தி
🍯 சணப்பு
🍯 தட்டைப்பயிறு
🍯 பில்லிப்பயிறு
🍯 கொத்தவரை
தயாரிக்கும் முறை
🍯 பசுந்தாள் உரம் என்பது பசுமையான, சிதைக்கப்படாத பொருள்களை உரமாகப் பயன்படுத்துவதாகும். இதனை 2 வழிகளில் பெறலாம்.
🍯 பசுந்தாள் பயிர்களை வளர்ப்பதன் மூலமோ அல்லது தரிசுநிலம், வயல் வரப்பு, காடுகளில் வளரும் மரங்களிலிருந்தோ எடுக்கப்படும். பசுந்தழைகளின் மூலமும் பெறலாம். பசுந்தாள் உரம் என்பது பயிறு வகைகளை பயிரிட்டு, பின் போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணில் உழவேண்டும். பசுந்தாள் உரத்திற்காக வளர்க்கப்படும் பயிர்கள் பசுந்தாள் உரப்பயிர்களாகும்.
🍯 முக்கியமான பசுந்தாள் உரப்பயிர்கள்: சணப்பு, தக்கைப் பூண்டு, பில்லி பயிறு, கொத்தவரை, அகத்தி
Go to top
பசுந்தழை உரம்
எல்லா மரத்தின் இலைகளையும் (ஆனால் புளி மரத்து இலை, வேலி இலை நீங்கலாக) உரமாக இடுவது பசுந்தழை உரம் ஆகும்.
🍯 பசுந்தழை உரம் என்பது வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட இலைகள், மரங்களின் கொம்புகள், புதர்செடி, சிறு செடிகளை உபயோகித்தல் ஆகும். காட்டு மரங்களின் இலைகள் தான் பசுந்தழை உரத்தின் முக்கிய மூலதனம் ஆகும்.
🍯 பயிரிடப்படாத நிலங்கள், வயல் வரப்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரம் ஆகும்.
🍯 பசுந்தழை உரத்திற்கு முக்கியமான செடி வகைகள் – வேம்பு, இலுப்பை, கொளுஞ்சி, சிலோன் வாகை, புங்கம், எருக்கு, அகத்தி, சுபாபுல் மற்றும் மற்ற புதர் செடிகள்.
நன்மைகள்
🍯 பசுந்தாள் உரங்கள் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகின்றன.
🍯 நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் தன்மை பசுந்தாள் உரத்திற்கு உள்ளது.
🍯 பசுந்தழை பயிர்களால் களைச் செடிகளின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.
🍯 காரத் தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு உதவுகிறது. வேர் முடிச்சு நூற்புழுக்களை, பசுந்தழை உரம் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
Go to top
கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம்
மண்வளத்தை பாதுகாக்க, வேளாண் கழிவுகளை, இயற்கை எருவாக மாற்றி பயன்படுத்தலாம்.கரும்பு அறுவடையின் போது, அதன் எடையில் 20 சதவீதம் உள்ள தோகையை, எரித்து விடுகின்றனர்.இதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கந்தக, தழைச் சத்துக்கள் காற்றில் விரயமாகின்றன.மண்ணில் நன்மைதரும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் வெப்பத்தால் இறக்கின்றன.நிலத்தில் இரும்புச் சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது.கரும்புத் துார்களின் முனைகள் கருகி, மறுதாம்பு பயிரில் எண்ணிக்கை குறைந்து, கரும்பு மகசூலும் குறைகிறது.இயற்கை முறையில் தோகையை, கம்போஸ்ட் உரமாக மாற்றுவது நல்லது:கரும்புதோகையை கரும்புதூர்களில் இருந்து விலக்கி அவை நனையும் படி நீர் பாய்ச்சி காளான் விதைகளை தூவி பின் அவற்றின் மீது மண் பரப்பி மீண்டும் நீர் பாய்ச்சி வந்தால் சில மாதங்களில் தோகை மட்கி உரமாகிவிடும்
இரசாயன முறையில் தோகையை, கம்போஸ்ட் உரமாக மாற்றுவது. 100கிலோ கரும்பு தோகையை, 7 க்கு 3 மீட்டர் பரப்பில், 15 செ.மீ., உயரத்தில் பரப்ப வேண்டும்.ராக்பாஸ்பேட், ஜிப்சம் தலா 2 கிலோ, யூரியா ஒரு கிலோ கலந்து துாவ வேண்டும். பின் மண், மாட்டுச்சாணம், மக்கிய குப்பை தலா 5கிலோவை, 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து, தோகை நனைய தெளிக்க வேண்டும்.இதுபோல ஒரு மீட்டர் உயரம் படுக்கைகள் அமைத்து, கடைசி அடுக்கின் மீது 1:1 என்ற வீதத்தில் கலந்து 5 செ.மீ., உயரத்திற்கு மூடிவிட வேண்டும்.இதன்மேல் தண்ணீரை தெளிக்க வேண்டும்.ஐந்தாவது மாத இறுதியில் தோகைகள் நன்கு மக்கி, ஊட்டமேற்றியகம்போஸ்ட் உரம் கிடைக்கும்,
Go to top
கற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி
தேவையான பொருட்கள் :
1. வேப்பெண்ணெய் -100 மில்லி,
2. கோமியம் – ஒரு லிட்டர் ,
3. கற்பூரம் – 10 வில்லை
4. சோப்பு
தயாரிப்பு முறை :
வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கரையும் நிலைக்கு கொண்டு வந்த பின்னர், சோப்பு கரைசல் வேப்பெண்ணெய்யுடன் கலந்தால் அடுத்த நிலைக்கு அவை வரும்.
கற்பூரம் தண்ணீரில் கரையாது என்பதால் கரும்பு கழிவுப் பாகில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொண்டும் கரைக்கலாம்.
நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கத்திரி பயிரில் தண்டு துளைப்பான், காய்துளைப்பான் ஆகியவற்றையும், மல்பரி, பப்பாளியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதாகும்.
நெற்பயிரில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் பூச்சி ஆகியவற்றை வெகுவாகக் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதால் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்.
பருத்திப் பயிரில் அனைத்துவகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது, இந்த இயற்கை பூச்சிவிரட்டி.
வெங்காயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நுனிகருகல் நோய்க்கு ஒரு தடவை இயற்கை பூச்சி விரட்டியைப் பயன்படுத்தினால், அறுவடை வரை நோய் பாதிப்பு இருக்காது. வெண்டை மற்றும் உளுந்து பயிர்களில் மஞ்சள் வைரஸ் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தும் தன்மை இந்த இயற்கை பூச்சிவிரட்டிக்கு உள்ளது.
வேர்க்கடலை பயிரில் தொடக்கம் முதலே தெளிக்கும்போது பூச்சிகள் தாக்குதலே இருக்காது. எலுமிச்சை மரங்களில் அனைத்து பூச்சிகளும் கட்டுப்படுவதுடன் அளவுக்கு அதிகமாக பூக்கள் வருடம் முழுவதும் தொடர்ந்து காய்க்கும் அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும்கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.
Go to top
பூண்டுக் கரைசல்
கத்திரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் (கோஜலம்) ஊறவைத்து, நன்றாகக் கொதிக்கவைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து பிஞ்சுப்பருவம் மற்றும் காய்ப்பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் செடிகள் நனையும்படி தெளிக்கலாம். செடிகளைத் தாக்கும் பூச்சிகளை விரட்டியடிக்கும் ஆற்றல், இந்த புகையிலை+பூண்டுக் கரைசலுக்கு உண்டு.
நொச்சி, வேம்பு, ஆடுதொடாஇலை (ஆடாதோடை), நிலவேம்பு, பப்பாளி இலை என கிள்ளினால், பால் வடியும் ஐந்து இலைகளையும் சம அளவில் சேகரித்து 2 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் (கோஜலம்) ஒரு நாள் முழுக்க ஊறவைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி விகிதம் கலந்து, அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் செடிகள் மீது தெளிக்கவேண்டும். தொடர்ந்து பிஞ்சுப்பருவம், காய்ப்பருவம் ஆகிய நாட்களில் தெளித்துவர, காய்ப்புழு, அசுவணி, இலைப்பூஞ்சணம் உள்ளிட்ட நோய்கள் அகன்று சீரான மகசூலைப் பெறலாம்.
Go to top
IMO
IMO என்றால் செரியூட்டப்பற்ற பாக்டீரியா
சாதம் நன்கு குழைந்த நிலையில் தண்ணீரை வடிக்காமல் இறக்கி அதை ஒரு மண்பானையில் வைத்து துணியால் மூடி வாய்பகுதியை கட்டிவிட வேண்டும்
இரண்டு நாள் கழித்து அதை திறந்து நன்கு மேலும் கிலுமாக கிண்டி விட வேண்டும் அவ்வாறு 11 நாட்கள் செய்ய வேண்டும் அதன் பிறகு நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும் ( 1kg அரிசி என்றால் 1kg நாட்டு சர்க்கரை ) 8 நாட்கள் கிண்டிவிட வேண்டும் மெத்தம் 21 நாள் முடிந்த பின் இதை ஒரு கோழிக்கு 5ml என்ற விகித்த்தில் உணவில் அல்லது தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
இதை இருட்டறையில் தான் வைக்க வேண்டும். விவசாயத்தில் பூக்கும் தருவாயில் இதை 1 லீட்டருக்கு 100ml விகித்த்தில் கலந்து தெளித்தால் அதிக மகசூள் கிடைக்கும்
Go to top
இயற்கைப் பூச்சிவிரட்டி
தயாரிக்கும் முறை (தோட்டக்கலை விவசாயம் Horticulture)
தேவையானப் பொருட்கள்
கோமூத்திரம் – 20 லிட்டர்
தோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை – 10 கிலோ
பெருங்காயம் – 100 கிராம்
வாய்ப் புகையிலை – 1 கிலோ
ஊமத்தம் செடிகள்மூ – ன்று
பச்சைமிளகாய்அ – ரைகிலோ
வேப்பங்கொட்டையை உரலில் போட்டு உலக்கையால் நன்றாக இடித்துக் கொள்ளவும். ஊமத்தம் செடி, புகையிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக கிள்ளிக் கொள்ளவும். இவற்றை கோமூத்திரம் உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, பெருங்காயத்தையும் போட்டு கலக்கி வேடு கட்டி நிழலில் வைத்து, தினமும் இருமுறை கலக்கி விடவும். 5 நாட்களில் பூச்சிவிரட்டி தயாராகி விடும். சுத்தமானத் துணியில் வடிகட்டி, பத்து லிட்டர் நீருக்கு 3 லிட்டர் வீதம் கலந்து தெளிக்கவும்.
Go to top
ஆடுகள் மூலம் இயற்கை உரம்
🐂 செயற்கை உரங்களின் பயன்பாடுகள் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
🐂 கால்நடைகள் மூலம் உரம் தயாரித்து பயன்படுத்தவது அதிகரித்து வருகிறது. இயற்கை உரங்களை தயாரிக்க மாடுகள் தான் தேவை என்பது எல்லாம் இல்லை.
🐂 ஆடுகள் இருந்தால் கூட அவற்றின் மூலம் இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்தலாம்.
தயாரிக்கும் முறை :
💐 ஆட்டு கழிவு ஐந்து கிலோ, ஆட்டு சிறுநீர் மூன்று லிட்டர், சோயா அல்லது நிலக்கடலை புண்ணாக்கு 1.5 கிலோ ஆகியவற்றை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
💐 பின்னர் இரண்டு ஆட்டின் பால், தயிர், இளநீர் (2), கள் ஒரு லிட்டர், கரும்புச்சாறு மற்றும் நன்கு பழுத்த வாழைப்பழம் 10 ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
💐 கள்ளுக்கு பதிலாக 50 கிராம்
💐 கரும்புச் சாறுக்கு பதிலாக 2 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வெல்லத்தை கரைத்துப் பயன்படுத்தலாம்.
💐 இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் கலனில் வைத்து நன்கு கலக்க வேண்டும்.
💐 ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் வலது புறமாக 50 முறையும், இடது புறமாக 50 முறையும் கலக்க வேண்டும்.
💐 பின் அந்த கலனை பு ச்சி மற்று புழுக்கள் அண்டாதவாறு பருத்தி துணி கொண்டு மூடி, சுத்தமான இடத்தில் வைத்துவிட வேண்டும்.
💐 இம்முறையில் பதினான்கு நாட்களில் இக்கலவை தயாராகிவிடும்.
பயன்படுத்தும் முறை :
🌿 கரைசலை நன்கு கலந்து, முறையாக பராமரித்தால் ஆறு மாதங்கள் வரை பயிர்களுக்கு இதனை பயன்படுத்தலாம்.
🌿 கரைசல் சற்று அதிகமான அடர்த்தியில் காணப்பட்டால் இளநீர் அல்லது தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்.
🌿 இக்கரைசலை நன்கு வடித்துவிட்டு ஒரு ஏக்கருக்கு, இரண்டு லிட்டர் வீதம் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
பயன்கள் :
🌱 இக்கரைசலை பயன்படுத்துவதன் மூலம் பு ச்சிகளின் தாக்குதல் இருக்காது.
🌱 பு பிடிக்கும் நேரத்திற்கு முன் தௌpப்பதன் மூலம் பு க்களின் என்ணிக்கையை அதிகரிக்கலாம்.
🌱 அதேபோல் காய்க்கும் முன் ஒருமுறை இக்கரைசலை அளிப்பதன் மூலம் காய்கள் திரட்சியாகவும், நல்ல ருசியுடன் இருக்கும்.
No comments:
Post a Comment