தமிழ்நாட்டில் பல வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே
கன்னி ஆடுகள்
இவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும். உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டது. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளைநிறம் காணப்படும். இத்தகைய நிறம் அமையப்பெற்ற ஆடுகளை ‘பால்கன்னி’ என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செங்கன்னி’ என்றும் அழைக்கப்பர்.
கொடி ஆடுகள்
இவை தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை. வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை ‘கரும்போரை’ என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செம்போரை’ என்றும் அழைப்பர்.
சேலம் கருப்பு
இந்த வகையான ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.
இவை பொதுவாக இறைச்சி மற்றும் தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது.
இந்திய வெள்ளாட்டு இனங்கள்
இந்தியாவில் மட்டும் 19 அறியப்பட்ட இனங்கள் நாடு முழுவதும் பரவிக் காண்ப்படுகின்றன. இவை காணப்படும் இடங்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.
ஜமுனாபாரி
உத்திரப்பிரதேசத்தின் “எட்டாவா” மாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினம் மிகப்பெரிய தொங்கும் காதுகளையும், நல்ல உயரமும் உடையவை. இது ரோமன் மூக்குடன் நீளமான அடர்ந்த முடியை உடையது. கொம்புகள் சிறியவையாக தட்டையாக இருக்கும். கிடா ஆடுகள் 65-86 கிலோ எடையும் பெட்டை ஆடுகள் 45-61 கிலோ எடையும் கொண்டிருக்கும். தினமும் 2.25 – 2.7 கி.கி பால் தரக்கூடியது. இதன் பால் உற்பத்தி 250 நாட்களில் 250-300 கி.கி வரை 3.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துடன் இருக்கும். இந்த இனங்கள் இங்கிலாந்தின் ‘ஆங்கிலோ நுபியன்’ என்னும் இனத்தை உருவாக்க கலப்பின ஆடாகப் பயன்படுத்தப்படுகிறது.
பீட்டல்
இது முக்கியமாக பஞ்சாபில் காணப்படுகிறது. ஜமுனாபுரியிலிருந்தே இவ்வினம் உருவாக்கப்படுகிறது. சிவப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்களுடன் கூடியது. கிடாக்கள் 65-85 கிலோவும், பெட்டை ஆடுகள் 45-61 கி.கி எடையும், பால் அளவு நாளொன்றுக்கு 1 கி.கி அளவும் இருக்கும். கிடாக்கள் தாடியுடன் இருக்கும்.
பார்பரி
இவ்வினம் உத்திரப் பிரதேசத்தின் எட்டாவா, எட்டா, ஆக்ரா, மதுரா மாவட்டங்களிலும் கமல், பானிபட், சோடக் பகுதிகளிலும் (ஹரியானா) காணப்படுகிறது. இது சிவப்பு, வெண்மை நிறங்களில் உள்ளது. கொம்புகள் நீண்டும், உரோமங்கள் குட்டையாகவும் உள்ள இவ்வாடுகள் அளவில் சிறியவை. கிடா ஆடுகள் 36-45 கிலோவும், பெட்டை ஆடுகள் 27-36 கிலோ எடையும் கொண்டவை. இவைக் கொட்டில் முறையில் பொதுவாக வளர்க்கப்படும். பால் உற்பத்தி 0.90 -1.25 கி.கிமும் கொழுப்புச்சத்து 50 சதவிகிதம் அளவும் பால் தரும் காலம் 108 நாட்களாகவும் இருக்கும். இவை 12-15 மாதங்களுக்கு இரு முறை மட்டுமே குட்டி போடுபவை.
தென் மாநிலங்களில் காணப்படுபவை
மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காணப்படும் இனங்கள் இவ்வகையாகும்.
சுர்தி
இவ்வின ஆடுகள் பெராரி போன்று குட்டையான கால்களையும் வெள்ளை நிறத்தையும் உடையவை. இவை பாம்பே நாசிக், சூரத்தில் அதிகமாக உள்ளன. பால் உற்பத்தி நாளொன்றுக்கு 2.25 கி.கி.
மலபார் (அ) தலச்சேரி
வெள்ளை மற்றும் பழுப்பு, கறுப்பு நிறங்களில் காணப்படும். 2-3 குட்டிகள் போடவல்லது கிடாக்கள் 40 / 50 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 30 கிலோ எடையும் கொண்டவை. நன்றாகப் பால் கொடுக்கக்கூடிய இனம்.
டெக்கானியா / ஒஸ்மனாபாடி
இவைகளை ஒஸ்மனாபாத் என்றும் அழைப்பர். சமவெளிகளில் காணப்படும் ஆடுகளின் கலவை இது. இவை கருப்பு, கருப்பு வெள்ளை கலந்தோ, சிவப்பு நிறத்திலோ காணப்படும். பால் அளவு 0.9 – 2.8 கிகி.
அயல்நாட்டு இனங்கள்
பல்வேறு அயல்நாட்டு இனங்கள் பால் உற்பத்தி மற்றும் துரித வளர்சிக்காக நம் நாட்டிற்குத் தருவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இவ்வின ஆடுகளின் பால் உற்பத்தி மிக அதிகம்.
டோகன் ஸ்பெர்க், சேனன், போயர், டமகேஸ், ஆல்பைன், நுபியன் மற்றும் அங்கோரா போன்றவை அவற்றில் சில.
நல்ல பால் உற்பத்தி உடைய ஆடுகள் கீழ்க்காணும் பண்புகளுடன் இருக்கவேண்டும்.
தலை சற்று பெரியதாக, அகலமான மூக்கும், வாயும் கொண்டதாக இருக்கவேண்டும். ஆட்டின் முகத்தில் பெண்மைத் தோற்றம் நன்கு தெரியவேண்டும்.
கண்கள் பெரிதாக அகன்று பளிச்சென்று இருக்கவேண்டும்.
கழுத்து மற்றும் தோள்பட்டை கழுத்து மெலிந்து நீளமாகவும், சமமாகவும் இருக்கவேண்டும். தோள்பட்டை, பின்கழுத்துப் பகுதிகள், கழுத்துடன் நன்கு இணைந்திருக்கவேண்டும்.
மார்பு நன்கு அகன்று மென்மையான தோற்றத்துடன் இருக்கவேண்டும்.
முன்னங்கால் நல்ல தோற்றத்துடனும், வலுவுடனும் இருக்கவேண்டும்.
பாதத்தை ஊனி நேராக நிற்கவேண்டும். காலைச்சாய்த்தவாறோ அல்லது நொண்டியபடி நடப்பதாகவோ இருக்கக்கூடாது.
உடல் சற்று வளைந்து குழியுடன் இருக்கவேண்டும். பின்பகுதி தோள்பட்டையிலிருந்த இடுப்பு வரை நேராகவும் வால் பகுதியில் சற்று இறங்கியும் காணப்படலாம். பின்பகுதியில் அதிகக் குழுி இருத்தல் கூடாது. கழுத்திலிருந்து வால் வரை நீளம் அதிகமாக இருத்தல் நலம்.
விலா எலும்புகள் இவை நன்கு புடைத்து, ஆடுகள் தாவும் போது கால்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கவேண்டும். வயிறு விலா எலும்பினைத் தாண்டி பெருத்து இருக்கக்கூடாது.
பின் பாகங்கள் தொடை, பின்னங்கால் இணையுமிடம், இடுப்பு போன்ற பாகங்களுக்கிடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும். பின்னங்கால்கள் முன்னே பார்த்து இருக்கவேண்டும்.
பின்னங்கால்கள் பின்புறக் கால்களின் வளைவுகள் நன்கு இணைந்து எந்த ஒரு தொங்கலுமின்றி வலுவுடன் இருக்கவேண்டும்.
மடி மற்றும் காம்புகள் மடியானது உடலின் அடியில் கீழே தொங்கியவாறு ஆட்டின் உடல் எடைக்கு ஏற்ற விகிதத்தில் அமைந்திருக்க வேண்டும். பக்கங்களில் இருந்து பார்க்கும் பொது பின்னங்கால்களுக்குச் சற்று முன்புறம் அமைந்திருக்கவேண்டும். பால் கறந்த பின்பு தளர்ந்து விடுவதாக, மென்மையானதாக இருக்கவேண்டும். காம்பு, நாளங்கள் எந்த சுருக்கமுமின்றி இருக்கவேண்டும். சராசரி நீளமுள்ள காம்பும் வயிற்றிலிருந்து நன்கு படர்ந்த நரம்புகளுடன் மடி நன்கு இருக்கவேண்டும்.
தோல் மற்றும் உரோமங்கள் தோல் மென்மையானதாக வளையக்கூடியதாக தளர்ந்த நிலையில் இருக்கவேண்டும். ஆடுகள் பழங்காலத்திலிருந்தே மலைகள், சமவெளிப் பகுதிகள் பள்ளதாக்குகள், குளிர் மற்றும் பனிப்பிரதேசங்கள் வெப்ப மித, வெப்ப நாடுகள் என அனைத்து வகையான இடங்களிலும் மனிதர்களுக்கு சிறந்த இறைச்சி, பால் மற்றும் உரோமங்களை வழங்கி வருகின்றன.
பொதுவாக உலகின் எல்லா இடங்களிலும் வெள்ளாடுகள் பால் தேவைக்காகவும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் வெப்ப மித வெப்பப் பகுதகளில் இறைச்சி, பால் உற்பத்திக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் ‘பொவிடே’ என்னும் குடும்பத்தைச் சார்ந்தவை. இவை ‘கேப்ரா’ என்னும் ஜீன்ஸ் வகையைச் சார்ந்தவை. வெள்ளாடுகள் பெரிசியன் நாடுகளில் கிழக்குப் பகுதியைச் சார்ந்தவை. இவை அறிவியல் பெயர் படி கேப்ரா ஹிர்கஸ், கேப்ரா ஏகாக்ரஸ் என்று அழைக்கப்படுகின்றன.
Go to top
வெள்ளாடுகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
1.இளம் ஆடுகளையே வாங்க வேண்டும். நல்ல ஆடுகள் பத்து ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும். இளம் ஆடுகளைத் தேர்ந்தெடுக்கப் பல் பார்த்து வாங்க வேண்டும். பல் அடிப்படையில் வயது நிர்ணயிப்பது.
3 மாத வயது வரை — பால் பல்
1 1/2 வயது வரை — 2 பல்
2 வயது வரை — 4 பல்
3 வயது வரை — 6 பல்
4 வயது வரை — 8 பல்
வெள்ளாட்டுக் குட்டிகள் பிறக்கும் போதே, முன் தாடையில் ஆறு வெட்டும் பற்கள் இருக்கும். ஆனால் கன்றுகளுக்கு இரண்டு பற்கள் மட்டுமே உண்டு.இரண்டு பல் வயதுள்ள ஆடுகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்ததாகும்.
2. ஆடுகளை வாரச் சந்தையில் வாங்குவதைவிச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அதுவும் நோய்த் தாக்குதல் அறடற பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அருகே பண்ணைகள் இல்லாத சூழ்நிலையில் சில ஆடு வளர்ப்பவர்களிடம் வாங்கிச் சேர்க்கலாம்.
3. பல குட்டிகள் போடும் ஆடுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தாய் ஆடு, 3-4 குட்டிகள் போட்டால், அதன் பெண் குட்டியும் அவ்வாறே பல குட்டிகள் ஈனும். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் 3-4 குட்டிகள் ஈனும் ஆடுகளை வளர்ப்போர் சில ஊர்களில் இருக்கின்றார்கள். இவற்றைத் தேடி வாங்கலாம். இப்படி நான் வாங்கிய ஆடு முதல் ஈற்றில் மூன்று குட்டியைத் தாங்கியது.
4. போட்ட குட்டிகளைக் காக்கவும், வளர்ப்போருக்குச் சிறிது பால் கொடுக்கவும் ஏற்றதாக, நன்கு பால் வழங்கும் திறனுடைய பெட்டையாடாக இருக்க வேண்டும். நன்கு திரண்ட வளர்ச்சியடைந்த மடியுள்ள ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மடியில் பாதிப்புள்ளதா என்பதை நன்கு ஆய்வு செய்து வாங்க வேண்டும்.
5. மிருதுவான, பளபளப்பான தோல் கொண்ட ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இது ஆட்டின் உடல் நலத்தைக் காட்டும்.
6. சுறுசுறுப்புடன் அகன்ற ஒளியுடன் கூடிய கண்களை உடைய ஆடுகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுவும் ஆட்டின் நலத்தைக் காட்டுவதே.
7. முதுகுப் புறமும், பின் பகுதியும், அகன்று விரிந்து இருக்கும் ஆடுகள் சிறந்தவை. அகன்ற முதுகுப் புறமும் விலா எலும்பும் அதிக தீவனத்தை எடுக்கும் தன்மையையும், அகன்ற பின்புறம் சிறந்த இனப் பெருக்கக் குணத்தையும் காட்டுவனவாகும்.
புதிதாக வாங்கிய வெள்ளாடுகளை உடனடியாக மற்ற ஆடுகளுடன் சேர்க்கக் கூடாது. ஆடுகளை ஒதுக்கி வைத்து, அப்பகுதியில் உள்ள தொற்று நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசி போட வேண்டும். இத்துடன் உடலில் உள்ள உண்ணி, பேன், தெள்ளுப் பூச்சிகளை ஒழிக்க மருந்து தெளிக்க வேண்டும். பிறகு, குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இவையாவும் முடிந்த பின்பே பண்ணையிலுள்ள மற்ற ஆடுகளுடன் சேர்க்க வேண்டும்.
வெள்ளாடு வளர்ப்பு முறைகள் குறித்து எழுதுமுன் வெள்ளாடுகளின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுவது நல்லது.
1. வெள்ளாடுகளுக்கு, அசைகின்ற வலுவான மேலுதடும், திறனுள்ள நாக்கும் உள்ளதால், முட்செடி, சுள்ளி, மரங்களின் பட்டைகள் ஆகியவற்றைக் கடித்துத் தின்ன முடியும்.
2. வெள்ளாடுகள் செடி, கொடிகளைக் கொய்து தின்னும் குணமுடையன. இவை செம்மறி ஆடுகளைப் போன்று குனிற்து புற்களை மேயுத் தன்மையுடையதல்ல.
3. செம்மறி ஆடுகளைப் போல், வெள்ளாடுகள் சேர்த்து மேயா. தனித்தனியாகப் பிரித்து சென்று மேயும். அருகிலுள்ள தன்னைச் சேர்ந்த வெள்ளாடுகளைக் கண்ணால் பார்க்காமல், மூக்கால் மோந்து கண்டு கொள்ளும்.
4. செம்மறி ஆடுகளைப் போன்று, வெள்ளாடுகளை ஓட்டிச் செல்ல முடியாது. மாறாக அவற்றை நடத்திச் செல்ல வேண்டும்.
5. வெள்ளாடுகள், நெருக்கடியால் சங்கடப்படுவது போலத் தனிமைப் படுத்தினாலும் பாதிக்கபடும். தனியாக ஓர் ஆட்டை வளர்ப்பது சிறந்ததன்று.
6. வெள்ளாடுகளுக்கு மிக மெல்லிய தோல் உள்ளதாலும், தோலுக்கு அடியில் கொழுப்பு இல்லாததாலும், குளிர், மழையை அதிகம் அவை தாங்கா. மழை பெய்ய ஆரம்பித்தால், வெள்ளாடு ஓடி ஒதுக்குப் புறத்தைத் தேடுவதைக் காணலாம். மேலும் வெள்ளாடுகள் வெப்ப நாடுகளில் நன்கு செழித்து வளரும்.
7. செம்மறி ஆடுகளுக்கு அதன் கூட்டமே அதற்குப் பாதுகாப்பு எதிரியைக் கண்டால் கத்தாமல் நின்று விடும். வெள்ளாடு, அங்கும் இங்கும் ஓடிக் கத்தி ஓலமிடும்.
தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி
Go to top
ஆடுகளில் நோய் பராமரிப்பு
ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.
மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி
ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி
ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி
அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.
குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9வது மாதங்களில் போட வேண்டும்.
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.
குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.
Go to top
கேள்வி பதில்
1.எந்தெந்த ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம் என்பதை எப்படி அறிவது?
கண்ணின் உட்சவ்வு வெளிறி போயிருக்கும், மூக்கில் சளி, ஆட்டின் பின் பகுதியில் கழிச்சலினால் சாணம் ஒட்டிக் கொண்டிருக்கும். தாடையில் வீக்கம், உடல் மெலிந்து காணப்படும். இது போன்ற ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியமானதாகும்.
2. ஏன் எல்லா ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்தல் கூடாது?
தேவையில்லாமல் எல்லா ஆடுகளுக்கும் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்தால் குடற்புழுக்களுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புத்திறன் குறைகிறது. குடற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகி மற்ற ஆடுகளுக்கும் பரவுகிறது. ஆகையால், தேவையான ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தால் போதுமானது.
3. பாமாச்சா அட்டை எதற்கு பயன்படுகிறது?
பாமாச்சா அட்டையை பயன்படுத்தி ஆட்டின் கண்ணின் உள்சவ்வைப் பார்த்து இரத்தசோகை அறியலாம்.
Go to top
நோய்கள்
*ஆடுகளை தாக்கும் நோய்கள்.**PPR ( வெக்கை நோய்)*
ஏப்ரல் முதல் ஜுன் மாதங்களில் தீவிரமாக இருக்கும்.
தடுப்பூசி -- மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்
வயது -- 3 மாதம் முதல்.
*ஆட்டுஅம்மை( Goatpox )*
ஜூலை முதல் ஆகஸ்டு மாதங்களில் தீவிரமாக இருக்கும்.
தடுப்பூசி -- ஜூன் அல்லது ஜூலை.
வயது -.4மாதம் முதல்
*துள்ளுமாரிநோய் ( ET)*
பருவமழை காலங்களில் தீவிரமாய் தாக்கும்.
தடுப்பூசி -- செப்டம்பர் மாதம்.
வருடத்தில் இரண்டு முறை போடுவதும் நல்லது.
6 மாதங்களுக்கு 1முறை.
பிறந்த குட்டிக்கு 21 வது நாள் ஒருமுறையும், 42 வது நாள் ஒரு தடவை போடவும்.
*HS*
அக்டோபர் மாதங்களில்
வயது -- 4 மாதம் முதல்.
*கோமாரி ( FMD)*
அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில்.
வயது -- 6 மாதம் முதல்.
*ஆந்த்ராக்ஸ்*
எந்த பருவ காலங்களிலும் தாக்கும்.
வருடம் 1 முறை ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி கட்டாயம்.
வயது -- 6 மாதம்.
ஒவ்வோர் தடுப்பூசி போடுவதற்கு இரண்டு நாட்கள் முன்னர், குடற்புழு நீக்கம் அத்தியாவசியம்.
Go to top
VACCINATION
DEWORMING; every 3 months once.
VACCINATION;
ET vaccine for the kid; 1st dose from the birth end of the 3rd week then the booster after 21 days. For- adults yearly once.
PPR VACCINE;
For kids-3rd month
completed, adult- yearly once (April- June).
GOAT POX;
Kids-4th to 5th month.
Adults- yearly once (July-sep)
FMD;
Kids-6th month.
Adults- yearly once(October-nov).
IMPORTANT NOTE;
To start every vaccination first give DEWORMING one week before then vaccinate the animals
No comments:
Post a Comment