பொருளடக்கம்
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
தென்னை
தென்னையில் வறட்சியை தாங்க சோற்றுக் கற்றாழை நடவு
அத்தி மரம்
பனை மரம்
கொய்யா சாகுபடி
மியவாகி முறை மர நடவு
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796
வாழ்த்துக்கள்
Go to top
தென்னை
அடிப்படை சாகுபடி முறைகள்-
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*மண்*.
🔸செம்பொறை மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் உகந்தவை
🔹ஆழமான (அதாவது 1.5 மீ ஆழத்திற்கு குறைவின்றி) வடிகால் வசதியுடன் கூடிய கடின மண்ணினை / மண்னுள்ள பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
🔺வடிகால் வசதியற்ற மண்ணினை தேர்வு செய்யக்கூடாது.
🔻மேற்புற மண்ணுடன் கூடிய கடின பாறை, நீர் தேங்கும் மற்றும் கடின களிமண் வகைகளை தவிர்ப்பது நல்லது.
🔹தென்னை சாகுபடிக்கு குறைந்தபட்ச ஆழமான (1.2மீ) மற்றும் ஓரளவு நன்கு நீரை தக்க வைக்கும் திறன் கொண்ட மண்வகையானது உகந்தது.
🔹மேலும் நிலத்தின் நீரை தக்க வைக்கும் திறன் மணல் மற்றும் களிமண்ணை அடுத்தடுத்த அடுக்குகளாக குவிப்பதனால் அதிகரிக்கிறது.
*சீரான (அ) பரவலான மழை அல்லது நீர்ப்பாசனத்துடன் கூடிய முறையான ஈரப்பதம் மற்றும்போதுமான அளவு வடிகால் வசதி ஆகியவை தென்னைக்கு
இன்றியமையாதவை*
🔹அமிலக்காரத் தன்மை 5.2 முதல் 8.6 வரை கொண்ட மண்ணில் தென்னை நன்கு வளரக்கூடியது.
*நிலம் தயாரித்தல்*
🌴நடவிற்கு முன் நிலம் தயாரித்தலானது நில அமைப்பு, மண்னின் வகை மற்றும் இதர சுற்றுப்புற சூழ்நிலைக் காரணிகளை பொறுத்தது.
🌴நடவிற்கு ஏற்ற இடமானது சுத்தப்படுத்தப்பட்டு, உரிய இடங்களில் நடவிற்கான குழிகளை குறியிட்டு இருத்தல் வேண்டும்.
🌴 சரிவான நிலமாக இருந்தால், மண் அரிப்பை தடுப்பதற்கான மற்றும் மண்ணை பாதுகாக்கும் முறைகளை கையாள வேண்டும்.
🌴உயர்மட்ட நிலத்தடி நீராக இருப்பின் சிறு குன்று / மண்மேடுகளில் கன்றுகளை நடுவது சிறந்தது.
🌴சரிவு அல்லது சமச்சீரற்ற நிலங்களில் சமதள வரப்புகளை அமைத்தல் வேண்டும்.
*கீழ்மட்ட மற்றும் நெல் வயல்களில் நிலத்தடி நீர்மட்டத்தின் மேல் குறைந்த பட்சம் 1மீ உயரம் வரை மணல் மேடுகளை உருவாக்குதல் வேண்டும்*
🌴சீர்படுத்தப்பட்ட வயல் இடங்களில் நடவானது நிலவரப்புகளில் செய்யப்படுகிறது.
*நிலம் வடிவமைத்தல்*
💜பல்வேறு முறையான நடவினை பின்பற்றினாலும் தகுந்த முறையினை தேர்ந்தெடுத்தல் மண், காலநிலை, கன்றுகளின் வகையைச் சார்ந்து இருக்க வேண்டும்
🌴 தகாத முறையை பின்பற்றினால் செடியின் பாகங்கள் மற்றொன்றின் மீது சாய்ந்தும் செடிகளுக்கிடையே நீர், ஓளி, ஊட்டச்சத்திற்காக போட்டியும் நீரின் சமச்சீரற்ற பகிர்ந்தளிப்பும் உருவாகி அதன் விளைவாக செயல்பாடு குறைந்து காணப்படும்.
*சதுர முறை, செவ்வக முறை, முக்கோண முறை, வேலி முறை, சமவாய்ப்புமுறை ஆகிய நிலம் வடிவமைத்தல் முறைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பின்படுத்தப்பட்டு வருகின்றன*
💜உலர் கோடை மாதங்களில் 4 நாட்களுக்கு கன்றுக்கு 45 லிட்டர் என்ற வீதத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
💛நாற்று நடும் முறையில் நட்ட கன்றுகளுக்கு போதுமான அளவு நிழல் அளித்தல் அவசியம்.
💙கன்ற நட்ட பின் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் ஒரு குச்சியை ஊன்றி அதனை சேர்த்து கட்ட வேண்டும். இதனால் வேகமான காற்றினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க இயலும்.
❤நீர் தேங்கக் கூடிய இடங்களில் சரியான வடிகால் வசதி அமைத்தல் அவசியம்.
🌴இலைச்சருகு அதிகமுள்ள பகுதிகளில் கன்றுகளை நடும் போது செம்மண்ணை 0.14 என்ற அளவில் இடுதல் வேண்டும்.
🌳குழிகளிலிருந்து களைகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும்.
🌴மேலும் கழுத்துப் பகுதியில் மழையினால் அடித்து வரப்பட்ட மண்ணின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அவ்வப்போது அதனை நீக்கிவிட வேண்டும்.
🌴எரு இடுவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் குழிகளை சீராக நிரப்பி வர வேண்டும். கன்றுகள் வளர வளர குழிகளை சீராக நிரப்பி வர வேண்டும்.
🌴தென்னங் கன்றுகளில் ஏதேனும் பூச்சி மற்றும் பூஞ்சாணத்தின் தாக்குதல் காணப்படுகிறதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
🌴மேலும் தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை குறைக்கத் தேவையான உத்திகளை மேற்கொள்ளுதல் அவசியம்.
*தகவல்-தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்*
Go to top
தென்னையில் வறட்சியை தாங்க சோற்றுக் கற்றாழை நடவு
விவசாயின் அனுபவம் :
முத்துவேல் என்ற விவசாயி தென்னை மரம் நடவு செய்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் அருகில்; ஒரு சோற்றுக் கற்றாழை கன்றை நடவு செய்து உள்ளார். அவை ஒரு வருடத்திற்குள் மரத்தை சுற்றி பக்கக் கன்றுகள் தோன்றி மடல்கள் பெரிய சைசாக வளர்ந்திருந்தது.
அவற்றை வெட்டி தென்னை மரத்தின் மறுபக்கம் கீழே புதைத்து வைத்தள்ளார் அவை தண்ணீர் விட மக்கியது போக வேரிலிருந்து தழைந்து வர ஆரம்பித்தது. இவை மரத்திற்கு ஒரு எருவாகவும் என்று நினைத்தார்.
ஆனால் என்னுடைய நிலத்திற்கும் பக்கத்து தோட்டத்தில் உள்ள தென்னந் தோப்பு விவசாயி உன்னுடைய தென்னை மரம் மட்டும் வாடாமல் இருக்கிறது. அதுவும் ஒரு பொழிக்குள்ள என்னுடைய தென்னை மரம் வாடி காய ஆரம்பித்தது ஏன் என்று தெரியவில்லையே என்றார். நான் அப்ப ( மூன்று வருடத்திற்கு முன்பு) தண்ணீர் இருந்ததால் சொட்டுநீர் போட்டு தண்ணீர் தினமும் பாய்ச்சி வந்தேன் தண்ணீர் பாய்ச்சியதால்; தான் என்னுடைய மரம் நன்றாக இருக்கிறது என்று நினைத்து விட்டேன்.
இப்பொழுது பார்த்தால் அவர் மரம் காய்ந்து பட ஆரம்பித்து உள்ளது. என்னுடைய மரம் பாளை போட்டு காய்ப்புக்கு வந்து விட்டது. இப்ப தண்ணீர் கூட பாய்ச்சுவது இல்லையே. வறட்சியின் காரணமாக நம்ப மரமும் காய்ந்து விடுமோ என்று வருத்தப்பட்டு கொண்டு தென்னை மரத்தின் அடியில் வெரும் புல்லாக இருந்த இடத்தில் தோண்டி பார்த்தேன். மண் பொது பொதுப்பாக இருந்தது நான் சோற்று கற்றாழையை வெட்டி புதைத்து வைத்த இடம் அது.
தென்னை மரம் மரத்து சோற்று கற்றாழை வைப்பது இது ஒரு வகைக்கு பரவாயில்லை நம்ம மரத்துல வண்டு தாக்குதலும் இல்லை. வறட்சியையும் தாங்கி கொண்டு வருகிறது. வேர் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. காய்ப்புக்கு வருகிற காய் சொறிக் காயாகவும் இல்லை என்று நினைத்து ஒவ்வொரு வருடமும் நான் சோற்றுக் கற்றாழை வளர வளர மடல்களை அறுத்து புதைத்து வைத்து வருகிறேன்.
எனவே இவற்றை கருத்தில் கொண்டு மற்ற தென்னந் தோப்பு வைத்துள்ள விவசாயிகளும் மரம் மரத்திற்கு ஒரு சோற்றுக் கற்றாழை வைத்து வறட்சியிலிருந்தும், வண்டு தாக்குதலில் இருந்தும் தென்னை மரங்களை பாதுகாக்கலாம் என்றார்.
Go to top
அத்தி மரம்
அத்தி (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி , வெள்ளை அத்தி , நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.
#அடிக்குறிப்பு
சங்ககாலத்தில் இந்த மரத்தின் பெயர் #அதவம்
ஆற்றயல் எழுந்த வெண்கோட்ட
#அதவத்து
எழு குளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழைய கொடியோர் நாவே
#குறுந்தொகை_24
#அத்தி_மரம்_மருத்துவ_குணங்கள்
மரத்தின் இலை, பால், பழம் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது. உலற வைத்துப் பொடித்த இலைகள் பித்தம், பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லது. காயங்களில் வடியும் இரத்தப்போக்கை உடனே நிறுத்தும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற உபாதைகளுக்கு அத்தி இலைகள் சிறந்தது. இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க உடன் பலன் கிடைக்கும். மரப்பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும்.
#அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கடும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
#அத்திப்பழத்தின்_பயன்கள்
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது
#விஞ்ஞான_ஆராய்ச்சி
அத்திப்பழத்தை ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
#சீமை_அத்திப்பழம்
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள். சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பொடியாக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
#மருத்துவ_குணங்கள்
பால் முதல் பட்டை வரை... அத்தி மரம்... அத்தனையும் வரம்!
காணக் கிடைக்காதது கிடைத்தால்... அதை 'அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பது, கண்ணுக்குத் தெரியாமல் நிகழும்.
அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய், பட்டை என அனைத்துப் பாகங்களுமே மருந்துப் பொருளாகவோ அல்லது துணை மருந்தாகவோ சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. அத்திப் பழத்தை அன்றாட உணவில் ஒரு பகுதியாகச் சேர்த்துக்கொள்ளலாம். நீர்நிலைகளின் அருகாமையில் அதிகம் காணப்படும் அத்தி மரத்தின் மருத்துவக் குணங்கள் குறித்து விவரிக்கிறார் பெரம்பலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கோசிபா.
#இலை
''உலரவைத்துப் பொடித்த அத்திமர இலைகள் பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லவை. காயங்களில் வடியும் ரத்தப்போக்கையும் இதைக்கொண்டு நிறுத்தலாம். இந்தப் பொடியில் தயாரித்த லோஷனைக்கொண்டு நாள்பட்ட மற்றும் அழுகிய புண்களைக் கழுவினால் குணம் கிடைக்கும். இதன் இலைகளைக் கொதிக்கவைத்த தண்ணீரால் வாய் கொப்புளித்தால் வாய்ப் புண்கள் ஆறும். ஈறுகளில் சீழ் வடிவதும் குணமாகும்.
#பிஞ்சு
கிராமங்களில் அத்திப் பிஞ்சுடன் பாசிப்பயிறு அல்லது துவரம் பருப்பு சேர்த்து சமைத்து உண்பார்கள். இதனால் மூலவாயு, மூலகிராணி, ரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கிவிடும். அத்திப்பிஞ்சுடன் வேலம் பிஞ்சு மாம்பட்டை ஆகியவற்றைச் சம அளவு எடுத்துக்கொண்டு வாழைப்பூ சாற்றில் நீர் சேர்த்துக் கஷாயமாக்கி அருந்துவார்கள். வயிற்றுக்கடுப்புக்கும் சீதக்கழிச்சலுக்கும் இது நல்ல மருந்து.
#காய்
பிஞ்சுபோலவே இதையும். நேரடியாகவே உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தலாம். முற்றாத காய்களைத் தேர்ந்தெடுத்தால் சமையல் சுவையாக இருக்கும். பிரமேகம், உட்சூடு, மலக்கட்டு போன்றவற்றையும் நீக்கும்.
#பழம்
அத்திப்பழம் மிகச் சிறந்த குருதிப் பெருக்கி. மலமிளக்கியும்கூட. நன்றாக முதிர்ந்து தானாகப் பழுத்து கீழே விழுந்த அத்திப்பழத்தை அப்படியே உண்ணலாம். தேனில் ஊறவைத்து பதப்படுத்தியும் உண்ணலாம். மலக்கட்டையும் பித்தத்தையும் அடியோடு நீக்கும். உண்ட உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து பித்தத்தை வியர்வையாக வெளியேற்றி உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
அத்திப்பழத்தை அப்படியே சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் அகலும். நெல்லிக்காய் சாப்பிடுவதுபோல அவ்வப்போது அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் கிட்டே வராது. அந்த நோய் இருப்பவர்களுக்கு அதன் பாதிப்பை ஆணிவேரோடு அகற்றிவிடும் வல்லமை வாய்ந்தது அத்திப்பழம்.
காட்டு அத்திப் பழத்தில் சிறிதளவு தினசரி ஒரு வேளை உண்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண்குஷ்டம் உள்ளிட்ட தோலின் அனைத்து நிறமாற்றப் பிரச்னைகளுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும். வெண்புள்ளிகளைக் குணமாக்க அத்திப்பழத்தைப் பொடி செய்து பன்னீரில் கலந்து பூசலாம்.
மலச்சிக்கல் விலக, வழக்கமான உணவுக்குப் பிறகு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கல் தொந்தரவு தீருவதற்கு இரவுதோறும் ஐந்து பழங்களை உண்டுவர நல்ல குணம் தெரியும். அத்திப் பழங்களை வினிகரில் ஒரு வாரம் வரை ஊறவைத்து தினசரி இரண்டு பழங்களைச் சாப்பிட்டுவருவது போதைப் பழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்துக்கு கைகண்ட மருந்து.
அத்திப்பழத்தில் புரோட்டின், சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகள் அதிக அளவில் பொதிந்திருப்பது அறிவியல் ஆராய்ச்சிகளின்படி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதனாலேயே, பலவீனமானவர்களுக்கும் ஜுரத்தில் கிடந்தவர்களுக்கும் உடல் தெம்பாக அத்திப் பழத்தைச் சாப்பிடக் கொடுக்கிறார்கள். பிரச்னை எதுவும் இல்லாவிட்டாலும்கூட, தினசரி இரண்டு அத்திப்பழங்களை உண்டுவந்தால் அது உடல் கவர்ச்சியைக் கூட்டும்.
#அத்திப்பால்
அத்தி மரம் முழுக்கவும் அரிவாளால் கொத்தப்பட்ட தழும்புகளைப் பார்க்கலாம். அத்தனையும் அத்திப் பாலுக்காகக் கீறப்படுபவை. சர்க்கரை நோயினால் ஏற்பட்ட பிளவை, கீழ்வாதம், மூட்டு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு அத்திப்பாலை பத்து போட்டால், விரைவில் குணம் தெரியும். வாத நோய்களுக்கு அத்திப் பாலை வெளிப்பூச்சாகத் தடவலாம். மூலம், பெரும்பாடு, ரத்த மூத்திர நோய்களுக்கு உள் மருந்தாகவும் கொடுக்கலாம்.
#பட்டை
அத்திப்பட்டையில் மோர்விட்டு இடித்துப் பிழிந்த சாற்றைத் தொடர்ந்து குடித்துவந்தால், பெண்களைப் படுத்தி எடுக்கும் பெரும்பாடு ஓடிப்போகும். இதையே வேறு முறையில், அத்திப்பட்டையை நன்றாக இடித்து பஞ்சு போன்று மிருதுவாக்கி, சமையலுக்குப் பயன்படுத்தாத பாத்திரத்தில் போட்டு, அரைப் படி நீர் சேர்த்து, எட்டில் ஒரு பங்கு வரும் அளவுக்கு சுண்டக் காய்ச்சுவார்கள். தினசரி மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் இந்தக் கஷாயத்தை குடித்துவந்தால் உதிரப்போக்கு, ஆசனக் கடுப்பு, சீதரத்தபேதி போன்றவை நீங்கும்.
Go to top
பனை மரம்
கற்பக விருட்சம் என்று கொண்டாடப்படுவது பனை. வேர் முதல் இலை வரை நமக்கு பயன்படுவதை சமூலம் என்கும் தமிழ் மருத்துவம். அந்த வகையில் பனையும் ஒரு சமூலம் தான். பனைபடு பொருள் பல இருந்தாலும் அதில் நுங்கு முக்கியமானது. கால்சியம் சோடியம் மக்னீசியம் இரும்பு சத்து வைட்டமின் சத்துக்கள் என்று நம் உடல் நலத்துக்கு பயன்படும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது நுங்கு. ''வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை வழங்கியுள்ள வரப்பிரசாதங்களில் நுங்குக்கு முக்கிய இடமுண்டு. எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காத சந்தர்பங்களில் நுங்கை சாப்பிட்டால், எப்பேர்பட்ட தாகமும் அடங்கிவிடும்.
இப்படி பலவித சிறப்புகளைக் கொண்ட நுங்கு விற்பனை செய்யும் ஒரு காட்சி.
பொதுவாக பனங்காயில் மூன்று நுங்குகள் இருக்கும். பனங்காயை மூன்றாக பிளந்து ஒவ்வொரு கண்ணாய் நொண்டி எடுப்பது தான் பொதுவில் இருக்கும் பழக்கம். எடுத்த பனங்குறும்பையை குப்பையில் எறிந்து விடுவது தான் வாடிக்கை. ஆனால் இந்த வியாபாரி வித்தியாசமாக சீவி நுங்கு எடுக்கிறார். முதலில் பனங்காயின் கருப்பு மேல்பகுதியை மேலோட்டமாக சீவுகிறார். இது கொஞ்சம் பருவெட்டு சீவலாக இருக்கிறது. அடுத்து நுங்கை புதைத்து வைத்திருக்கும் குருத்துப் பகுதியை சின்ன சின்னதாக சீவுகிறார். இது பொடிவெட்டு சீவலாக இருக்கிறது. நுங்கு எடுத்த பின் நடுத்தண்டு பகுதியை கழிவாகக் கழிக்கிறார். இப்படி வித்தியாசமாக நுங்கு சீவும் காரணம் பற்றி அவரிடம் கேட்கும் போது அவர் சொன்ன விளக்கம் இப்படியாக இருந்தது.
பொடி வெட்டான சீவல் ஆடுகளுக்கு தீவனமாகிறது. பருவெட்டு சீவல் மாடுகளுக்குத் தீவனமாகிறது. எனவே தான் இரண்டும் தனித்தனியாக சேமிக்கப்படுகிறது. கழிக்கப்பட்ட நடுத்தண்டை காய வைத்து அடுப்பெரிக்க எரித்துரும்பாகப் பயன்படுத்துவோம் என்றார். இப்படி எதையும் வீணாக்காமல் அத்தனையையும் எதோ ஒரு விதத்தில் பயன்படுத்தும் வழக்கம் எனக்கு புதிதாக இருந்தது. கூடவே ஒரு விஷயமும் புரிந்தது. இயற்கையின் படைப்பில் வீணானது என்று எதுவும் கிடையாது. பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் எல்லாமே பயன் உள்ளது தான்.
பனையின் மாண்பை அறிந்த"கம்போடியா மக்கள்"அதை மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதன் மதிப்பை உலகம் அறிய செய்கின்றனர்.
பனை மரம் உயரமாக மின்னலை உள்வாங்கி வேருக்கு கடத்தி பூமியில் உள்ள High reactivity elements எனப்படும் சோடியம் பொட்டாசியம் கால்சியம் போன்ற தனிமங்களை அயனியாகாக்குகிறது அந்த உலோக அயனிகளை உணவாக எடுக்கும்போது மனித உடலுக்கு பெரும் நன்மை அளிப்பதால் அதனை "கற்பத்தரு" என்றழைத்தனர் !
சித்தமருத்துவத்தில் ஜெயநீர் மற்றும் முப்பு உருவாக்கும் போது கள்ளு பயன்படுத்துவது இதற்காக தான் முட்டியில் பூசபடும் சுண்ணாம்பை 2 நாழிகையில் அயனியாக மாற்றிவிடுகிறது பதநீர்.
எழுதுகோலும் தெய்வம் என்றார் பாரதி. எனில் பனைஏடும் தெய்வம் தானே?
வரலாறு அளித்த கருவிகளில் முதன்மையானது கள்ளும்,ஓலையும் இவை இல்லையேல் சங்கப்பாடல் இல்லை இதை நம்மால் மறுதளிக்க முடியுமா?
அறம்,மறம் என்று வேடம் தரித்துகொண்டு பனையின் கொடைகளை மறந்து போனோம் ஆனால் கம்போடியா தொல்குடிகள் அதன் மகத்துவம் அறிந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் உள்ளனர் அவர்களை போல நாமும் பனையில் இருக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி உலக தரத்திற்கு உயர்த்த முயலுவோம் .....
கள்ளும்-பதநீர் மறந்ததால் தமிழகம் இன்று நோயின் பிடியில்
1.கள் மற்றும் பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்படுகிறது அதனால் தமிழன் ஆண்மை குறைவிற்காக லேகியம் வாங்கி சாப்பிடும் நிலமைகள் வந்திருக்காது.
2. 40% அதிகமான சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில் உருவாக காரணம் பனைவெல்லம் மறக்கடிக்கபட்டு கரும்புசர்கரை புகுத்தபட்டதனால் என்பதை மறுதளிக்க முடியுமா பணக்காரர்களின் வியாதியாக இருந்த சர்க்கரை நோயை அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியது பனங்கருப்பட்டிக்கு மாற்றாக கரும்பு சர்க்கரையை பயன்படுத்தியதே ???
3.பதநீர் அருந்திய பெண்களுக்கு மூட்டுவலி,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு இல்லாமல் இருந்தது மகப்பேறு காலங்களில் பால் சுரப்பு மிக அதிகமாக இருந்தன கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள் பல் சம்மந்தமான குறைபாடுகள் இருக்கவேஇருக்காது .
4.பதநீர் அருந்தும் ஆண்களுக்கு முடி நரைக்காது 60 வயதிற்கு மேல் தான் நரைவரும்
5.வயோதிகம் ஏற்படாது இளமையாக இருக்கலாம், இன்று பெருமளவு பிரச்சினை ஆண்களின் விந்துக்களில் உள்ள உயிரணு குறைபாட்டை பதநீர் சரி செய்யும் அதற்கு காரணம் பதநீர் மற்றும் கள்ளில் மிகுதியாக உள்ள இரும்பு,கால்சியம்,அமினோ அமிலம் மற்றும் புரதசத்துக்கள்
பனையின் நற்பண்புகள் தமிழர்கள் அறியாத ஒன்றல்ல ...
நோய்களை உருவாக்கும் உக்தி, அரசியல் தலைவர்கள் துணையுடன் நடைமுறைபடுத்தும் வணிகர் நலம் சார்ந்தது என்று.
கொள்ளையர்களுக்கு எப்போதும் நிறம் ஒன்றுதான் அன்று வெள்ளையாக(ஆங்கிலேயன்) இருந்தான்,இப்போது (..............) மிதக்குடியன் ஆன தமிழன் எதற்காக மிகைகுடியன் ஆக்கபட்டான் என்று உங்களுக்குகே தெரியும் ????
படங்கள் உதவி: தினகரன் பகலவன் குமாரசுந்தரம்
Go to top
கொய்யா சாகுபடி
ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா, வெப்ப மண்டலத்தில் வளரக்கூடிய ஒரு பழப்பயிர். அடர் நடவு முறையில் கொய்யா பயிரிட்டு, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் அதிக தண்ணீர் செலவின்றி நல்ல லாபம் ஈட்டலாம் என்கிறார், மதுரை மாவட்டம் பூஞ்சுத்தி விவசாயி ஏ.சுப்பையா. இவர் வேப்படப்பு கிராமத்தில் தனது 20 ஏக்கரில் அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்துள்ளார். பயிரிட்டு 16 மாதங்களான நிலையில் ஒரு அறுவடை செய்துள்ளார். ஏக்கருக்கு ஏழு டன் வரை கிடைத்ததாகவும், ஏராளமான விவசாயிகள் வயலுக்கு வந்தே கொள்முதல் செய்வதுடன், கொய்யாவை சார்ஜாவிற்கு ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவிக்கிறார்.
கொய்யா சாகுபடியில் சாதித்தது குறித்து சுப்பையா கூறியதாவது: 20 ஏக்கரில் அடர் நடவு முறையில் கொய்யா 16 மாதங்களுக்கு முன் பயிரிட்டேன். ஆறு அடிக்கு ஆறு அடி அகலத்தில் ஒரு சதுர மீட்டர் அளவுள்ள குழிகளில் செடிகள் நடப்பட்டன. தோட்டக்கலைத்துறை மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்தேன். ஒரு ஏக்கருக்கு 900 வீதம் 20 ஏக்கருக்கு 12 ஆயிரம் கன்றுகளை நட்டேன். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. பனாரஸ், லக்னோ 49, லக்னோ 46 ரக கன்றுகள் நடப்பட்டன. சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை 56 ஆயிரம் ரூபாய் வரை 3.20 எக்டேருக்கு மானியம் வழங்கியது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்வதால் கொய்யா மரம் செழிப்பாக வளர்கிறது. தேன். கோமியம், பசு சாணம், ஜீவஅமிர்தம், மூலிகை பூச்சி விரட்டி ஆகிய இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைத்தது. 16 மாதங்களான நிலையில் ஒரு ஏக்கருக்கு ஏழு முதல் பத்து டன் வரை காய்கள் கிடைக்கிறது. ஒரு காய் ஒரு கிலோ வரை எடை கொண்டதாகவும் இருக்கிறது.
கொய்யா ருசியாகவும், இனிப்பாகவும் இருப்பதால் ஏராளமானோர் தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ 80 ரூபாய் வரை போகிறது. சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன். கன்றுகள் நட்டதுடன் தினமும் கண்காணிக்க வேண்டும். தோட்டக்கலைத்துறையினரின் ஆலோசனையின்படி இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் செடி 15 அடி வரை வளர்ந்துள்ளது.
கன்றுகள் வளர்ந்த பிறகு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். இரண்டாண்டுகளுக்கு பிறகு செலவை எடுப்பதுடன், தொடர்ந்து லாபம் ஈட்டலாம். கொய்யா பயிரிடுவதன் மூலம் குறைந்தாண்டுகளில் அதிக மகசூல் ஈட்டலாம், என்றார். தொடர்புக்கு:
94422 04550
.
- எம்.ரமேஷ்பாபு மதுரை.
Go to top
மியவாகி முறை மர நடவு
படத்தில் இருப்பது என்னவென்று இங்கும் இன்பாக்ஸிலும் கேள்விகள்.
வேறொன்றுமில்லை மியவாகி முறையில் மரம் நடவு செய்வதற்கு நிலத்தை பதப்படுத்தும் ஒரு நிலையே புகைப்படத்தில் காண்பது.
600 சதுரடியில் எவ்வாறு மியவாகி முறையில் மரங்களை நடலாம் என்பதை காண்போம் (100 சதுரடியிலும் இது சாத்தியமே)
10 அடி அகலம் 5 அடி ஆழம் மற்றும் 60 நீளத்திற்கு குழி எடுத்தபின் இரண்டு நாட்கள் வெப்பம் தனிய குழியை ஆறவிடவேண்டும் பின்னர் குழி முழுவதும் காய்கறி கழிவுகள் ( உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கும்) வாழை மட்டைகள் மற்றும் இலைகள் , தென்னையோலைகள் மற்றும் மாட்டுச்சாணம் கொண்டு நிரப்பவேண்டும்.( தென்னையோலைகள் ஒரு லேயர் அதன் மீது மண் ஒரு லேயர் காய்கறி கழிவுகள் ஒரு லேயர் பின்னர் மண் ஒரு லேயர் வாழைமட்டை மற்றும் இலைகள் ஒரு லேயர் மீண்டும் மண் ஒரு லேயர் என ஒவ்வொரு இயறக்கை கழிவுகளுக்கு மேலும் மண் கொண்டு நிரப்பவேண்டும் ) குழி முழுவதும் நிரம்பி வழியும் வரை தண்ணீர் விட வேண்டும். பின்னர் மண்ணைக்கொண்டு குழியை மூடிவிட வேண்டும். மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு பிறகு ஒரு அடியில் குறைந்தது 5 முதல் 7 வகையான 12 நாட்டு மர கன்றுகளை நெருக்கமாக நடவு செய்தல் வேண்டும். தேங்காய் நார்களை செடிகளின் இடையே நிரப்பிவிட்டு (ஈரப்பதத்தை நிலைநிறுத்த)வாய்ப்பு இருப்பின் சொட்டு நீர் அமைந்துவிட்டால் மரங்கள் குறைந்த தண்ணீர் செலவில் வேகமாக வளரும்.பஞ்சகாவியம் தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு சேர்ப்பது இன்னும் சிறப்பு.
இயற்கையின் படைப்பில் மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும் போட்டி, பொறாமை போன்ற குணங்களை விடுத்தது ஒன்றுக்கொன்று உதவி தானும் வளர்ந்து உடனிருப்போரையும் வளரச்செய்யும் அற்புதத்தை இந்த வகை நடவின் வாயிலாக மரங்கள் வளர வளர அறியலாம், பல வகை மரங்கள் ஒன்றோடு ஒன்று உறவாடி வளரும் காட்சி நிச்சயம் சீதோசனத்தில் மட்டுமல்ல மனித மனங்களிலும் ஒரு மாற்றத்தை ஏற்பதும் என்பதே நிதர்சனம்.
சிறிய இடத்தில பெரிய ஆக்ஸிஜன் தொழிற்ச்சாலையை சிறப்பாக இந்த முறையில் அமைக்கலாம் குறிப்பாக வளாக ஓரங்களில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரெசர்வ்ட் சைட்கல், பள்ளி, கல்லூரி வளாகங்கள் என இவ்வாறான மியவாகி முறை மர நடவு பாதுகாப்பு மற்றும் மாசை குறைப்பதோடு அந்த பகுதியை இயற்கையாகவே வெப்பத்தில் இருந்து பெருமளவு காக்கும், ஏராளமான நுண்ணுயிர் மற்றும் பறவையினங்கள் வாழும் இருப்பிடமாக மாறும். இறை கடாட்சம் பெற்ற இடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
மூங்கில், வேம்பு, தேக்கு , மகாகொனி, சரக்கொன்றை, அத்தி, பிய்யன் போன்ற மரங்கள் நடுவது சிறப்பு.
நான் அறிந்த விபரங்களை இங்கே தொகுத்துள்ளேன், இன்னும் இந்த முறை நடவுகளை செம்மைப்படுத்தும் வழிகள் இருந்தால் தெரியப்படுத்தலாம்
No comments:
Post a Comment