கோழி - Hen

நாட்டுக் கோழி வளர்ப்பு முறை

பொருளடக்கம்


நாட்டுக் கோழி ஓர் பார்வை


நாட்டு கோழி பண்ணை அமைப்பு


நாட்டுக் கோழிகளின் வகைகள்


கோழிகளுக்கான உணவுப் பட்டியல்


கிருமிநாசினி


Lab


கோழிகள் கண் வீக்கம்


செயற்கை முறையில் நாட்டுக் கோழி முட்டைகளை குஞ்சு பொரிக்கச் செய்தல்


கருங்கோழி


நாட்டுக் கோழி ஓர் பார்வை



1. நாட்டுக் கோழி வளர்ப்பு

2. வளர்க்கும் முறைகள்

3. பராமரிப்பு முறைகள்

4. வளர்ப்பது எப்படி?

5. நாட்டுக் கோழிகளின் வகைகள்

6. இனப் பெருக்கம்

7. முட்டையிடுதல்

8. அடை கட்டுதல்

9. தீவனம்

10. நோய்த் தடுப்பு

11. முதலீடு


Go to top



நாட்டுக் கோழி வளர்ப்பு



வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன.

மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது.

குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும்.

வளர்க்கும் முறைகள்

• நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.

• பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

• முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.

"பெருவிடை 5 கோழிக்கு 1 சோவல்  சரியாக இருக்கும்.    சோவல் வயது அதிகமாகவும் கோழி வயது குறைவானதாக இருக்க வேண்டும்     குறைந்த பட்சம் 2 வருடத்திற்கு ஒருமுறையாவது சாவல் மாத்தினால்  குஞ்சுகள் நல்ல அருமையான குஞ்சு கிடைக்கும் சேவலும் நல்ல அரோக்கியமாக இருக்கும்.      பூபதி. எடப்பாடி"

பராமரிப்பு முறைகள்

• பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.

• முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும்.

• 48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.

வளர்ப்பது எப்படி?

• அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.
• அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகிவிடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.

Go to top



நாட்டுக் கோழிகளின் வகைகள்



• கொண்டைக் கோழி, கழுகுக் கோழி, சண்டைக் கோழி, குருவுக் கோழி, கருங்கால் கோழி ஆகிய கோழி வகைகளை தனித்தனியே அடையாளம் காண முடியாது போனாலும் அதன் வண்ணங்களை வைத்தே அடையாளம் காண முடியும்.

நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.
குருவுக்கோழி,
பெருவிடைக்கோழி,
சண்டைக்கோழி
அசில்கோழி,
கடக்நாத் என்னும் கருங்கால்
கோழி,
கழுகுக்கோழி அல்லது
கிராப்புக்கோழி என்னும் நேக்கட்
நெக்,
கொண்டைக்கோழி,
குட்டைக்கால் கோழி.
உயர்ரக நாட்டுக்கோழி இனம்

இனப் பெருக்கம்

• நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் இருக்கும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.

முட்டையிடுதல்

• முதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும். அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும். கோழிகள் முட்டையிடும்போது ஒரு வித சத்தத்தை எழுப்பும். 
 அதை கேவுதல் என கூறுவர்.

• கோழிகளிடம் இருந்து முட்டைகளைப் பிரித்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். துளையிடப்பட்ட மண் பானை அல்லது மரப்பெட்டியில் உமி அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கலாம்.

• ஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாள்களில் முட்டையிடும். பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.

அடை கட்டுதல்

• நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.

• அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடை காக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும்.

• கோழி குஞ்சு பொரிக்கும் காலம் 21 நாள்கள் ஆகும்.

• அடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாள்கள் வரையில் அடையில் அமர்ந்திருக்கும். பின்னர் எழுந்து சென்று எச்சம் இட்டு, உணவு, தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்தக் கூடை அருகிலேயே உணவு, தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தினமும் தாய்க் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்க் கோழியுடன் நன்கு பழகியவர்கள் தாய்க் கோழியை அகற்றிவிட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடை காக்கத் தொடங்கிய 21 நாள்களில் குஞ்சு பொரிக்கும்.

• நாட்டுக் கோழிகள் தங்களது குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பத்தை இறகுகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும். ஆரம்ப காலத்தில் பருந்து, காகம், கழுகு ஆகியவை குஞ்சுகளை கொத்திச் செல்லப் பார்க்கும். எனவே தாய்க் கோழி குஞ்சுகளுடன் இருப்பது அவசியம். கோழிகளையும், குஞ்சுகளையும் இரவு நேரத்தில் அடைத்து வைப்பது சிறந்தது.

தீவனம்

• ஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.
நோய்த் தடுப்பு

• நாட்டுக் கோழிகளில் பொதுவாக நோய்த் தடுப்பு முறையைக் கையாளத் தேவையில்லை. இருப்பினும் ராணிகேட் தடுப்பூசியை 8 வார வயதில் போடுவது நல்லது. ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களில் இந்தத் தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது.

• தடுப்பூசிக்கு முன்னதாக மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. இந்த முறையில் நாட்டுக் கோழிகளைப் பராமரித்தால் வீட்டில் இருந்தபடியே முட்டைகளை சந்தைப்படுத்தியும், கோழிகளை விற்றும் பயன்பெறலாம்.

முதலீடு

ஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம்.

வருமானம்

ஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது. 970 கோழிகள் நல்லமுறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.

சந்தை வாய்ப்பு

இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.

நாட்டு கோழி பண்ணை அமைப்பு

நாட்டுகோழி பண்ணை அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய நிலையில் ஆர்கானிக்,ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும் நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் ( பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் ,அதன் மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)

பண்ணை அமைப்பு முறை

நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம்,இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறியஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை போன்ற கொட்டகை போதுமானது.

கோழி தீவனம்

கோழிகளுக்கு உணவாக பச்சை கீரைவகைகள், அசோலா,கினியா புல்,கோ-4,குதிரை மசால் ,காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம்.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

நோய் தடுப்பு

தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.

விற்பனை

குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் .
ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்

Go to top



நாட்டுக் கோழிகளின் வகைகள்



🐔 குருவுக்கோழி, பெருவிடைக்கோழி, சண்டைக்கோழி, கருங்கால் கோழி, கழுகுக்கோழி, கொண்டைக்கோழி, குட்டைக்கால் கோழி ஆகிய இனங்கள் உள்ளன.

உயர்ரக கோழி இனம்

🐔 நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு, வனராஜா, கிரிராஜா, சுவர்ணதாரா ஆகியவை உயர்ரக கோழி இனம் ஆகும்.
வீட்டு மேலாண்மை

🐔 கோழியானது பண்ணை மூலமாகவும், பண்ணை இல்லாமலும் வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக்கோழி வளர்ப்பை கூண்டு முறை, கூண்டு இல்லா முறை என இரண்டு வகையாக பிரிக்கலாம். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காகவும், கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காகவும் பயன்படுகிறது.

கட்டற்ற கோழி வளர்ப்பு

🐔 இம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழி வளர்ப்பு மேற்கொள்ளலாம். இதில் கோழிகளின் நடமாட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன.

கூண்டு முறை

🐔 முட்டைக்கோழிகளை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். இந்த 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.

கூண்டு இல்லா முறை

🐔 இம்முறைக்கு அதிக இடம் தேவைப்படும். இதில் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற பொருட்களால் அமைக்க வேண்டும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுமே காணப்படும். முட்டை உற்பத்தியானது கூண்டு முறையை விட குறைவாக இருக்கும்.

தீவன மேலாண்மை

🐔 கட்டற்ற கோழி வளர்ப்பு முறையில் ஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.

🐔 கூண்டு முறை கோழி வளர்ப்பில் குஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.

🐔 கூண்டு இல்லா கோழி வளர்ப்பில் கோழிகளுக்கான உணவு, நீர் ஆகியவற்றை குறிப்பிட்ட இடங்களில் வைக்க வேண்டும். மக்காச்சோளம், கம்பு ஆகியவற்றை அரைத்து உணவாக கொடுக்கலாம். காலை, மாலை என இருமுறை தீவனம் போட வேண்டும். ஆனால் இதில் தீவனம் மிகுதியாக வீணாகும்.

இனப்பெருக்க மேலாண்மை

🐔 கட்டற்ற கோழி வளர்ப்பு முறையில் நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் காணப்படும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.
முட்டையிடுதல்

🐔 முதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும். அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும். கோழிகளிடம் இருந்து முட்டைகளைப் பிரித்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். துளையிடப்பட்ட மண்பானை அல்லது மரப்பெட்டியில் உமி அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கலாம்.

🐔 ஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாட்களில் முட்டையிடும். பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.

அடை காத்தல்

🐔 நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓரு கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.

🐔 அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடை காக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும். கோழி குஞ்சு பொரிக்கும் காலம் 21 நாட்கள் ஆகும். அடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாள்கள் வரையில் அடையில் அமர்ந்திருக்கும். பின்னர் எழுந்து சென்று எச்சம் இட்டு, உணவு, தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்தக் கூடை அருகிலேயே உணவு, தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தினமும் தாய்க் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்க் கோழியுடன் நன்கு பழகியவர்கள் தாய்க் கோழியை அகற்றிவிட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடை காக்கத் தொடங்கிய 21 நாட்களில் குஞ்சு பொரிக்கும்.

சுகாதார மேலாண்மை

🐔 கோழிகளை எந்த முறையில் வளர்த்தாலும் அதன் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கட்டற்ற முறையில் கோழிகள் அடையும் இடத்தை இரு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

🐔 கூண்டில்லா முறையில் அடியில் போட்டுள்ள இடுபொருட்களை இரு நாட்களுக்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். இவற்றில் நீர் சிந்துவதால் அந்த இடம் நனைந்து நோய் கிருமிகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே கவனமாக பராமரிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்

தடுப்பூசி

🐔 நாட்டுக் கோழிகளில் பொதுவாக நோய்த் தடுப்பு முறையைக் கையாளத் தேவையில்லை. இருப்பினும் ராணிகேட் தடுப்பூசியை 8 வார வயதில் போடுவது நல்லது. தடுப்பூசிக்கு முன்னதாக மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்வது நல்லது.

இயற்கை மருந்து

🐔 நாட்டுக் கோழிகள் உணவு உண்ணாமல் ஒரே இடத்தில் அமர்ந்து காணப்பட்டால் அதற்கு வெங்காயம், பூண்டு ஆகியவற்றை அரைத்து உணவாக வைக்க வேண்டும்.
விற்பனை

🐔 கோழிகளில் முட்டை உற்பத்தியை மேற்கொண்டால் அந்தந்த பகுதிக்குரிய முட்டை தேவையை பூர்த்தி செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். முட்டை கோழியின் எருவானது இரசாயன உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. முட்டை பருவம் முடிந்த கோழிகளுக்கு நன்கு உணவளித்து சற்று கனம் ஆனவுடன் வியாபாரிகளிடம் விற்று விடலாம். விற்பனை கோழிகளை 2 முதல் 3 கிலோ வந்தவுடன் விற்பனை செய்ய வேண்டும்.

Go to top



கோழிகளுக்கான உணவுப் பட்டியல்



*அடர் தீவனம்*

மக்காசோளம்
சோளம்
கம்பு
கேப்பை
கோதுமை
அரிசி
கடலை புண்ணாக்கு
சோயா புண்ணாக்கு
எள்ளு புண்ணாக்கு
தேங்காய் புண்ணாக்கு
சூரியகாந்தி புண்ணாக்கு
உப்பில்லா கருவாட்டு தூள்
அரிசி தவிடு
கோதுமை தவிடு

*பசுந்தீவனம்*

கோ 4,5
குதிரை மசால்
வேலிமசால்
முருங்கை கீரை
அரைக்கீரை
பொண்ணாங்கன்னி கீரை
மல்பெரி இலை
அசோலா
கத்தாலை
வாழை குருத்து, தண்டு
அருகம்புல்

*மற்றவை*
IMO

மேலும் வீட்டு கழிவுகள் மார்க்கெட் கழிவுகள் ஹோட்டல் கழிவுகள் முட்டை ஓடுகள்
(முட்டையிடும் கோழிக்கு மட்டும்) போன்றவையும் தரலாம்.

Go to top



கிருமிநாசினி



பயன்படுத்தும் முறை
15 லிட்டர் தண்ணீர்
1 kg நாட்டு சர்க்கரை
1 லிட்டர் E M கரைசல்
இவற்றை ஒன்றாக கலந்து வைத்து மூடி வைக்க வேண்டும்
தினமும் ஒருமுறை திறந்து மூட வேண்டும் அதில் உள்ள வாய்வு வேளியேறுவதற்காக
ஒரு வாரம் முடிந்ததும் பழத்தின் மனம் வரும் இதை எடுத்து விவசாயத்திலும் பயன் படுத்தலாம் கோழி கொட்டகையிலும் பயன் படுத்தலாம்
கோழிகளின் குடிக்கும் தண்ணீரில் பெரிய கோழிக்கு 1முதல் 1.5 ml
குஞ்சு கோழிக்கு 0.5 ml
விகித்த்தில் தண்ணீர் சேர்க்காத Lab யை சேர்க்க வேண்டும்

இதன் நன்மைகள்

1. கோழி கொட்டகையில் கிருமி நீக்கம் செய்ய இதை பயன்படுத்தலாம் முற்றிலும் இயற்கையானது

2. கோழிகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்புசக்தியை கொடுப்பதால் கோழிகளின் இறப்பு குறையும்

3. விவசாயத்திலும் பயன்படுத்தலாம்

4. இதை கொடுப்பதால் கோழி எச்சத்தின் வாடை வருவதில்லை எனவே தினமும் சுத்தம் செய்ய தேவையில்லை


Go to top



Lab



தயாரிக்கும் முறை
(உதாரணமாக)
அரிசி கழுவிய (கலைதல்) தண்ணீர் 100 மில்லி என்றால் அதில் 10 மடங்கு பசும்பால் அப்படி என்றால் 1 லிட்டர், மேலும்
நாட்டு சர்க்கரை

முதலில் அரிசி கழுவிய தண்ணீரை ஒரு டப்பாவில் அடைத்து ஒரு 4 நாள் வைக்க வேண்டும் அது நன்றாக புளித்த பின் அதில் பாலை சேர்த்து 3 நாள் வைக்க வேண்டும் 3 நாள் முடிந்ததும் பாலும் தண்ணீரும் சேர்ந்து மேலே தயிராகவும் கீழோ மஞ்சள் நிறத்தில் தண்ணீராகவும் பிரியும் அதில் தயிரை அகற்றிவிட்டு கால் கிலோ நாட்டு சர்க்கரை கலந்து 5 நாள் வைக்க வேண்டும் மொத்தம் 12 நாள் நோதித்து கிடைப்பது தான் Lab என்பது.

Go to top



கோழிகள் கண் வீக்கம்



1.இதற்கு காலநிலை மாற்றமமும் ஒரு காரணம். வெப்பம் அதிகரித்து வருவதால் இந்த பிரச்சனை வரும்.இதற்கு தினமும் மோர் மற்றும் கற்றாழை மிக்ஸியில் அரைத்து பண்ணையில் வைத்து விடவும். கோழிகள் அதுவாக அதனை குடித்து விடும்.ஒரு வாரத்தில் இந்த பிரிச்சனை முடிவுக்கு வரும்.

2. இது கொரைசா (சளி) பிரச்சனை இதற்கான தீர்வு. *கொரைசா நோய்*

புஞ்சை புளியம்பட்டி கருப்புசாமி அவர்களின் பதிவு:-

*அதிக தாக்குதல் இருந்தால்*

- சிறிய பிளஸ்டிக் டப்பியில் விக்ஸ் அல்லது ஜண்டுபாமை உள்புறம் பக்க வாட்டில் தடவி, கோழி குஞ்சுகளை இந்தனுள் விட்டு மேலே அட்டையை வைத்து மூடிவிடவும்; 1 - 2 நிமிடம் கழித்து, குஞ்சுகளை எடுத்து வெளியில் விடவும் (அதிக நேரம் இதனுள் விடவேண்டாம்)

- இது போல ஒரு நாளைக்கு காலை, மதியம், மாலை நேரம் செய்ய வேண்டும்.

*வரும் முன்காக்க*

- சின்ன வெங்காயம் ஒரு கைபிடி
- இஞ்சி ஒரு விரளி
- பூண்டு 4 பல்
- மிளகு 6
- துளசி இலை ஒரு கைபிடி

இவை அனைத்தையும் அரைத்து சாறு எடுத்து,

20 நாள் குஞ்சுகளுக்கு = 4 சொட்டு
40 நாள் குஞ்சுகளுக்கு = 6-7 சொட்டு
40 நாளுக்கு மேல் உள்ள குஞ்சுகளுக்கு = 10 சொட்டு
1கிலோ எடை உள்ள குஞ்சுகளுக்கு = 15 சொட்டு வரை

காலை = 6 மணிக்கு
மதியம் = 12 மணிக்கு
மாலை = 6 மணிக்கு

2 நாள் கொடுக்க வேண்டும்.


Go to top



செயற்கை முறையில் நாட்டுக் கோழி முட்டைகளை குஞ்சு பொரிக்கச் செய்தல்



1. கிராமப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் அட்டைப்பெட்டிஅல்லது சாந்துச்சட்டி அல்லது பழைய மண்பானை ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதனுள் பாதி அளவிற்கு அரிசித்தவிடு அல்லது மணலை நிரப்பவும்.

2. இவ்வாறு நிரப்பப்பட்ட அரிசித் தவிடு அல்லது மணலின் மீதுகுஞ்சு பொரிக்க வேண்டிய கோழி முட்டைகளை வைக்கவும்.

3. வட்டத்தட்டினுள் பொருத்தப்பட்ட 15 வாட் முதல் 40 வாட்வரையிலான மின்சார பல்பினை தவிடு அல்லது மணலின் மீதுபரப்பப்பட்ட முட்டைகளின் மேல் சீரான வெப்பம் பரவத்தக்க வகையில்தொங்கவிடவும்.

4. 100 டிகிரி பார்ஹீன் அளவு சீரான வெப்பம் தரத்தக்க வகையில்மின்சார பல்புக்கும், கோழி முட்டைகளுக்கும் இடையே உள்ள தூரத்தைஅவ்வப்போது தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும்.

5. உடல் வெப்ப நிலையைக் கணக்கிடக்கூடியவெப்பநிலைமானியை பயன்படுத்தி கோழி முட்டையின் மீது சீரானவெப்பம் பரவச் செய்யும் வகையில் கண்காணித்துக்கொள்ளலாம்.

6. முட்டைகளை முதல் நாள் முதல் 17வது நாள் வரை ஒருநாளைக்கு 3 முறை வீதம் அதாவது 8 மணி நேரத்திற்கு ஒருமுறைதிருப்பி விடவேண்டும்.

7. 18வது நாள் முட்டைகளைத் திருப்பி விடுவதை நிறுத்திவிடவேண்டும்.

8. 18வது நாள் முதல் ஈரப்பதம் 80% வரை தேவைப்படுவதால் வெதுவெதுப்பான நீரில் நனைத்த பருத்தி துணியை முட்டைகளின்மீது 1நிமிடம் பரப்பி விடவும். இவ்வாறு 18 வது நாள் முதல் 22வது நாள் வரைஒரு நாளைக்கு 3 முறை செய்தால் குஞ்சு பொரிப்புத் திறன் நன்குஇருக்கும்.

9. மின்சாரத் தடை ஏற்பட்டு வெகு நேரம் ஆகிவிட்டால் சற்றே சூடுசெய்யப்பட்ட தவிட்டின் மூலம் முட்டைகளை மூடி வைத்து விடவும்.

10. இந்த எளிய முறையை வாத்து, வான் கோழி, கினிக் கோழிமற்றும் காடை முட்டைகளை பொரிக்கச் செய்யவும் பயன்படுத்தலாம்

நன்மைகள்:

1. அடைக்கோழிகள் இல்லாமல் அடைமுட்டைகளை அதிகஅளவில் குஞ்சு பொரிக்க செய்ய இயலும்.

2. அடைக்கோழிகள் அடை அமரும் குணம் விரைவில் மாறிமுட்டையிட தொடங்கும்.

3. வாத்து முட்டைகளை குஞ்சு பொரிக்க அடைக்கோழிக்காகஅலைய வேண்டியதில்லை.

4. இவ்வாறு செயற்கை முறையில் குஞ்சு பொரிக்கச் செய்தால்ஒரே நேரத்தில் நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கையையும் பெருகச்செய்யலாம்.

ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்
suresh A- 9655783673. Tirunelveli (Dist)

Go to top



கருங்கோழி



கருங்கோழி என்பது உள்ளும் புறமும் எல்லா பாகங்களும் கருப்பாக இருக்கும் ஒரு கோழிவகை...இவை இந்திய மத்தியப் பிரதேச மாநிலக் காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, "கடக்நாத்' என்றழைக்கப்படும் கோழியினமாகும்...இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது... தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன...இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது... இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர்... ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்... இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது... கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம்... இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன...மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா,தில்லி போன்ற வடமாநிலத்து மக்கள் இக்கோழிகளின் இறைச்சி, ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.. மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது...சீன உட்பட பல்வேறு நாட்டில் மருத்துவத்திலும், உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன...

Go to top



No comments:

Post a Comment