கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை
* கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும்.
* வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம்.
* மூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும்.
* பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்திரித்த இடத்தில் உடனே “டிஞ்சர்’ அயோடின் தடவி விட வேண்டும்.
சீம்பால் :
* பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
* கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் “இம்முனோ கிளாபுலின்’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன.
* பொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும்.
* கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாகலாம்.
*அப்போது இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்கலாம். முட்டை 1 (55 – 60 கிராம்), தண்ணீர் 300லி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால்500மிலி.
Go to top
பால் பண்ணை ஆரம்பிக்கும் தோழமைகள் கவனத்திற்கு
100% கண்டீப்பாக கலப்பினங்களை தவிர்த்துவிடவும்.
சாஹிவால் / கிர் / ரெட் சிந்தி / தார்பார்க்கர் / காங்ராஜ் / ரத்தி போன்ற நாட்டு மாட்டு இனங்கள் 8 முதல் 15 லிட்டர் பால் தரக்கூடிய வட மாநில இனங்களை தெரிவு செய்யவும்.
கட்டாயம் மாடுகளை வாங்கி பண்ணை அமைக்கும் முன் பல முன்னோடி நாட்டு மாட்டு பண்ணைகளை நேரில் சென்று அவர்களின் முழு அனுபவ பகிர்வை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் ஐந்து எண்ணிக்கை ஆரம்பித்து ஆறு மாதம் கழித்து 5 எண்ணிக்கை என உயர்த்தவும்.
நாட்டு மாட்டின் பாலுக்கு இன்றும் இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கிஉண்டு.
பால் விற்பனையோடு நின்றுவிடாமல் பாலை மதிப்பு கூட்டி தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் பன்நீர் போன்றவை செய்து விற்றால் மிகுதியான லாபம்.
அதோடுமட்டுமல்லாமல் நாட்டு பசுவின் சாணம் மற்றும் சிறு நீர் மூலம் இயற்கை இடுபொருகளான பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போன்றவை தயாரித்து விற்பனை செய்யலாம்.
சாணத்தில் இருந்து விபூதி, சாம்பிராணி மற்றும் ஆர்க் சோப்பு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கலாம்.
முடிந்தவரை மாடுகளின் எண்ணிக்கை பத்து முதல் இருபதுக்குள் வைத்துகொள்வது சிறப்பு.
வடமாநிலங்களில் மாடுகள் வாங்கும் போகும் முடிந்தவரை அங்கு நன்கு பழக்கமானவர்களை அழைத்துச் செல்லவும்.
கட்டாயமாக மாடுகளை எடுத்துவருவதற்கான அனுமதியை முறையாக பெற்று எடுத்துவரவும்.
வீண்விவாதங்களை மற்றும் அநாகரீகமற்ற பேச்சுகளை மாடு வாங்கும் இடத்தில் தவிர்க்கவும்.
மாடுகள் விலை முடிக்கும் முன்பு உள்ளூர் மருத்துவரை அலைத்து மாடுகளை பரிசோதனை செய்த பின்னர் வாங்கவும்.
மாடுகளை விலை முடிந்தவுடன் அதற்கு ஏதாவதொரு அடையாளக்குறிகளை இடவும்.
முடிந்தவரை கன்று ஈன்றுள்ள மாடுகளை மூன்று நேரம் நீங்கலே பால் கரந்து பார்த்து வாங்கவும். முடிந்தவரை சினை மாடுகள் வாங்குவதை தவிர்க்கவும்.
மாட்டுக்கென்றே வடமாநிலத்தில் பலர் லாரிகளை இயக்குகின்றனர் அவற்றில் மாடுகளை எடுத்துவருதல் சிறப்பு மற்றும் கட்டாயமாக வடமாநிலத்தில் இருந்து திரும்பி வரும் உள்ளூர் லாரிகளை தவிர்க்கவும்
Go to top
மாடு சினை நிற்க
மாடு சினை நிற்காமல் இருந்தால் செய்ய வேண்டிய நாட்டு வைத்திய முறை – Dr புண்ணியமூர்த்தி அவர்கள் ....
1) ஒரு வாரம் அதிகாலையில் ஆறு மணிக்கு வெறும் வயிற்றில் மாட்டிற்கு 4 டேபிள்ஸ்பூன் சீரகத்துடன் கருபட்டியை கலந்து கொடுக்க வேண்டும். இதை ஒரு வாரம் அதிகாலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வர வேண்டும்.
2) அடுத்த வாரம் சோத்துக் கத்தாழை இரண்டு மடல் வெறும் வயிற்றில் மாட்டிற்கு கொடுக்க வேண்டும். இதை ஒரு வாரம் செய்ய வேண்டும்.
3) அதற்கு அடுத்த வாரம் பெரண்டை ஒரு கைப்பிடி வெறும் வயிற்றில் மாட்டிற்கு கொடுக்க வேண்டும். இதை ஒரு வாரம் செய்ய வேண்டும்
4) கடைசி ஒரு வாரம் முருங்கை இலை அல்லது கருவேப்பிலை இரண்டு கைப்பிடி கருபட்டியுடன் கலந்து வெறும் வயிற்றில் மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.
இப்படி செய்து வந்தால் மாடு heat இற்கு வந்து சினை உறுதியாக நிற்கும்.
No comments:
Post a Comment